Asianet News TamilAsianet News Tamil

திராவிட மாடல் அரசால் தமிழர்களுக்கு மற்றுமோர் அநீதி! தமிழர் விரோத போக்கு ஏன்? பொங்கும் நாராயணன் திருப்பதி.!

அகில இந்திய கவுன்சிலிங் நடைபெறும் அதே நேரத்தில் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். 

Another injustice to Tamils by Dravida model government! narayanan thirupathy
Author
First Published Jul 25, 2023, 1:30 PM IST

அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கும் நடத்துவது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக  எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாணவ‌ர்களு‌க்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கான அனுமதி கிடைக்கவுள்ள நிலையில்,  அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கும் நடத்துவது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இதையும் படிங்க;- உயிரையே பறிக்கும் நிலைக்கு பெயர் தான் திராவிட மாடலோ? திமுகவை விளாசும் நாராயணன் திருப்பதி..!

Another injustice to Tamils by Dravida model government! narayanan thirupathy

அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின்னர் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால் மேலும் நூற்றுக்கும் அதிகமான தமிழக மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள். அகில இந்திய கவுன்சிலிங் நடைபெறும் அதே நேரத்தில் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். 

இதையும் படிங்க;- அரசியல்வாதிகள் ஆக்கிரமித்த நிலங்களை மீட்க வக்கில்ல.. அப்பாவி மக்கள் வாழும் இடங்களை இடிப்பதா? கொதிக்கும் சீமான்

Another injustice to Tamils by Dravida model government! narayanan thirupathy

அதனால், தமிழக மாணவர்களுக்கு கிடைக்க கூடிய மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு பிற மாநில மாணவர்களை சென்றடையும். மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றும் போது, தமிழகம் மட்டும் அதே நாளில் நடத்துவது ஏன்? நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்வதை திமுக அரசு தடுப்பது ஏன்? திமுகவின் தமிழர் விரோத போக்கு ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios