ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று சூப்பர் திட்டத்தை அறிவித்திருக்கிறார் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான 262 கோடி ரூபாய் மதிப்பிலான "ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா" திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

தடேப்பள்ளியில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசும் போது.."ஆண்டுதோறும் வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறுவதற்கும், வாகன காப்பீடு பெறவும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.இதற்காக தினந்தோறும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருப்பதாக ஓட்டுநர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சுமையில் இருந்து அவர்களின் துயர் துடைக்கவே கடந்த ஆண்டு முதல் இத்திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு இத்திட்டத்துக்காக 236 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 262 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட இருக்கிறது என்றார்.