சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வடசென்னையை சேர்ந்த ஒருவர் திமுக சார்பில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வடசென்னையை சேர்ந்த ஒருவர் திமுக சார்பில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேர் கட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள் , 435 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து நாளை மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கும்பகோணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து 20 தொகுதிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. 

இதில், பெரும்பாலானோர் எளிய பின்னணியை சேர்ந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று சென்றனர். இதில், அறிவாயலத்திற்கு வந்த பெரும்பாலானோர் காரில் வந்து இறங்கினர். ஆனால், ஒரு சிலர் ஆட்டோ, பேருந்தில் வந்து சென்றவர்கள் மேயர் மற்றும் துணை மேயர்களாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

20 மாநகராட்சி மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியல்

1.சென்னை மாநகராட்சி

மேயர் - ஆர்.பிரியா 

துணை மேயர் - மு.மகேஷ்குமார்

2.மதுரை மாநகராட்சி

மேயர் - இந்திராணி

3.திருச்சி மாநகராட்சி

மேயர் - அன்பழகன்

துணை மேயர் - திவ்யா தனக்கோடி

4.திருநெல்வேலி மாநகராட்சி

மேயர் - பி.எம்.சரவணன் 

துணை மேயர் - கே.ஆர்.ராஜு 

5.கோவை மாநகராட்சி

மேயர் - கல்பனா

துணை மேயர் - வெற்றிச்செல்வன்

6.சேலம் மாநகராட்சி

மேயர் - ஏ.ராமச்சந்திரன் 

துணை மேயர்- தினேஷ்குமார் 

7.ஈரோடு மாநகராட்சி

 மேயர் - நாகரத்தினம்

துணை மேயர்- செல்வராஜ்

8.தூத்துக்குடி மாநகராட்சி 

மேயர்- அமைச்சர் கீதாஜீவன் சகோதரர் என்.பி.ஜெகன் 

துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ் 

9.ஆவடி மாநகராட்சி 

மேயர் வேட்பாளர்- ஜி.உதயகுமார் 

10.தாம்பரம் மாநகராட்சி 

மேயர் - வசந்தகுமாரி கமலக்கண்ணன் 

துணை மேயர் - ஜி.காமராஜ்

11.காஞ்சிபுரம் மாநகராட்சி 

 மேயர்- மகாலட்சுமி யுவராஜ் 

12.வேலூர் மாநகராட்சி 

மேயர்- சுஜாதா அனந்தகுமார் 

துணை மேயர் - சுனில் 

13.கடலூர் மாநகராட்சி 

மேயர் - சுந்தரி 

14.தஞ்சை மாநகராட்சி

 மேயர் - சண்.ராமநாதன் 

துணை மேயர் - அஞ்சுகம் பூபதி

15.கும்பகோணம் மாநகராட்சி

துணை மேயர்- தமிழழகன்

16.கரூர் மாநகராட்சி

மேயர் - கவிதா கணேஷன்

துணை மேயர்- தாரணி P.சரவணன்

17. ஒசூர் மாநகராட்சி

மேயர் - சத்யா 

துணை மேயர்- ஆனந்தைய்யா 

18. திண்டுக்கல் மாநகராட்சி

மேயர் - இளமதி 

துணை மேயர் - ராஜப்பா 

19. சிவகாசி மாநகராட்சி

மேயர் - சங்கீதா இன்பம்

துணை மேயர்- விக்னேஷ் பிரியா 

20.நாகர்கோவில் மாநகராட்சி

மேயர் - மகேஷ் 

துணை மேயர் - மேரி பிரின்சி 

21.திருப்பூர் மாநகராட்சி

மேயர் - தினேஷ்குமார்