பி.ஜி.ஆர் போன்ற நிறுவனங்களுக்கு டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கினால் முந்தைய திமுக ஆட்சி காலம் போல் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் மின்வெட்டு தொடங்கும் என்றும் இப்போதே பொதுமக்கள் ஜெனரேட்டர், யுபிஎஸ் வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பி.ஜி.ஆர் போன்ற நிறுவனங்களுக்கு டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கினால் முந்தைய திமுக ஆட்சி காலம் போல் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் மின்வெட்டு தொடங்கும் என்றும் இப்போதே பொதுமக்கள் ஜெனரேட்டர், யுபிஎஸ் வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக குடும்பத்திற்கு நெருக்கமான பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய்க்கு டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கியுள்ளது. தரம் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு இந்த நிறுவனம் 350 கோடி ரூபாய் கடனில் இருந்தது.

வங்கியில் வெறும் 35 கோடி மட்டுமே கையிருப்பு வைத்திருந்த நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி முடிவதற்கு முன்னர் 35,000 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. தமிழக பாஜக செபிக்கு கடிதம் எழுதுவதோடு, சிஏஜி மற்றும் மத்திய அரசின் மற்ற துறைகளுக்கும் இது குறித்த தெரியப்படுத்தும். இது குறித்து டான்ஜெட்கோ விளக்கம் அளிக்க வேண்டும். கம்பெனி மூலம் கொள்ளை அடித்து, அதனை 2000 ஆக மாற்றி மக்களுக்கு வழங்குவது தான் திராவிட மாடல். சினிமா, ரியல் எஸ்டேட், பவர் ஜெனரேஷன் என எல்லா துறையிலும் இவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இது தான் உண்மையான் கார்ப்பரேட் அரசு. மத்திய அரசையோ, பிரதமரையோ விமர்சிக்க இவர்களுக்கு தகுதி இல்லை. பி.ஜி.ஆர் போன்ற நிறுவனங்களுக்கு டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கினால் முந்தைய திமுக ஆட்சி காலம் போல் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் பவர் கட் தொடங்கும். இப்போதே பொதுமக்கள் ஜெனரேட்டர், யுபிஎஸ் வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது. தினசரி காலை விநாயகரிடம் தோப்பு கரணம் போடுவது போல், திமுக கூட்டணி கட்சிகள் முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஹிஜாப் விவாகரத்தை பொறுத்தவரை வகுப்புகளில் அணியக்கூடாது என உறுதிப்படுத்தப்பட்டுதே தவிர, பொதுவெளியில் அணிய எந்த தடையும் இல்லை. சிலர் வேண்டுமென்றே திரித்து கூறுகின்றனர்.
