திமுகவுக்கு நெருக்கடி.. ஆளுநரை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை..! அதிர்ச்சியில் ஸ்டாலின்
ராணுவ வீரர் கொலை தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து புகார் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து திமுக அரசு தொடர்பாக புகார் மனு அளிக்கவுள்ளார்.
ராணுவ வீரர் கொலை
கிருஷ்கிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (50). இவர் பேரூராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்துக்கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த கவுன்சிலர் சின்னசாமி இது பொது தண்ணீர் தொட்டி இதில் துணி துவைக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சின்னச்சாமிக்கும் பிரபாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கவுன்சிலர் சின்னச்சாமியை ராணுவ வீரர் பிரபாகரன் தாக்கியுள்ளார். இதன் காரணமாக கோவப்பட்ட சின்னச்சாமி உறவினர்கள் ராணுவ வீரர்கள் பிரபாகரன்,பிரவு மற்றும் அவரது குடும்பத்தை தாக்கியுள்ளனர்.
விசிக-வில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்? திருமாவளவனுடன் திடீர் சந்திப்பு!!
பாஜக போராட்டம்
இதில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் சின்னச்சாமி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே திமுக அரசால் ராணுவ வீரருக்கு பாதுகாப்பு இல்லையென கோரி பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது. தமிழக ஆளுநரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அந்த கட்சியின் முன்னாள் ராணுவ பிரிவினர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
ஆளுநரை சந்தித்த பாஜக நிர்வாகிகள்
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பாஜக மாநில தலைவர்களுடன் சேர்ந்து சென்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, மாநிலத்தில் சட்ட- ஒழுங்கு சீர்குலைந்துள்ள சமீபத்திய குறைபாடுகள் குறித்து ஒரு மனுவைச் சமர்ப்பித்தோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினோம்” என குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை
இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகையும் டுவிட்டர் பதிவு வெளியிட்டிருந்தது. அதில், ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இன்று காலை டெல்லி செல்லும் அவர் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு செயல்பாடு தொடர்பாக புகார் அளிக்கவுள்ளார்.
இதையும் படியுங்கள்
ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம்... கவலை தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை!!