விசிக-வில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்? திருமாவளவனுடன் திடீர் சந்திப்பு!!

சென்னையில் உள்ள விசிக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்து பேசினார். 

gayathri raguramm met thirumavalavan at chennai head office of vck

சென்னையில் உள்ள விசிக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்து பேசினார். முன்னதாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். மேலும் அவரது டிவிட்டர் பதிவில், நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வேண்டும்.. வன்முறைக்கு பல்கலை துணை நிற்பதா? வேல்முருகன் ஆவேசம்

மேலும் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதுமட்டுமின்றி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண்களுக்கான சக்தி யாத்திரையை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். ஜனவரி மாதம் அறிவித்து பின்னர் ஈரோடு தேர்தலுக்காக தனது பயணத்தை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க: ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம்... கவலை தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை!!

அப்போது காயத்ரி ரகுராமிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பொன்னாடை போர்த்தி நூல் வழங்கினார். காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு பொன்னாடை வழங்கினார். இதுக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம், எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா தொல்.திருமாவளவனுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios