ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம்... கவலை தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை!!
ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் நாகரசம்பட்டி பேரூராட்சி 1 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் சின்னசாமிக்கும் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னாசாமி தனது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் மேலும் சிலருடன் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு மற்றும் அவர்களது தந்தை மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தமிழக காவல்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை… அண்ணாமலை குற்றச்சாட்டு!!
மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. இதனிடையே தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் ராணுவ வீரர் கொல்லப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் முன்னாள் ராணுவ அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம்... ஆளுநரை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!
இந்த நிலையில், ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து ஆளுநர் மாளிகையின் டிவிட்டர் பதிவில், ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.