Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிசாமியுடன் மோதல்.. திடீரென ஓபிஎஸ்ஐ சந்தித்த அண்ணாமலை..!

அதிமுக -  பாஜக கூட்டணிக்கு இடையே வார்த்தை போர் உச்சத்தை எட்டியுள்ளது. இருகட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் தேனி பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். 

Annamalai suddenly meet panneerselvam
Author
First Published Mar 8, 2023, 6:42 AM IST

அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதலில்  காயத்ரி ரகுராம் விலகியதை அடுத்து பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 

இதையும் படிங்க;- Annamalai: நான் தோசை இட்லி சட வரவில்லை! ஜெயலலிதா போல தலைவராக வந்தேன்! அண்ணாமலை பேச்சு

Annamalai suddenly meet panneerselvam

இந்நிலையில், அதிமுக -  பாஜக கூட்டணிக்கு இடையே வார்த்தை போர் உச்சத்தை எட்டியுள்ளது. இருகட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் தேனி பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். அப்போது, ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் திருவுருப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இதையும் படிங்க;- அண்ணாமலையை அலறவிடும் அதிமுக.. நிர்மல் குமாரை தொடர்ந்து முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய இபிஎஸ்..!

Annamalai suddenly meet panneerselvam

இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக முன்னாள் முதலமைச்சர், அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார் பழனியம்மாள் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். 

 

இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மன வலிமையை அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன். தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார். அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios