பத்திரிக்கையாளரை குரங்குடன் ஒப்பிட்ட சம்பவம்.!மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது-அண்ணாமலை திட்டவட்டம்

பத்திரிகையாளர்களை பார்த்து குரங்கு என்று உவமையாகதான் சொல்லப்பட்டது எனவும் இதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு வாக்குவாதத்தில் முடிவடைந்தது.
 

Annamalai said that he will not apologize for comparing journalists to monkeys

பத்திரிக்கையாளரை விமர்சித்த அண்ணாமலை

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது சமீப காலமாக பத்திரிக்கையாளர்களிடம் அண்ணாமலை நடந்து கொள்ளும் விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அவர், நான்  குரங்கு மாதிரி என்றுதான் சொன்னேன் எனவும்  குரங்கு என்று சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். குரங்கு என சொன்னதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, தவறு செய்யாத போது நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் ? மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது எனவும் தெரிவித்தார். எனது செய்தியை கவர் செய்வதும் செய்யாமல் போதும் உங்கள் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

Annamalai said that he will not apologize for comparing journalists to monkeys

மன்னிப்பு கேட்க முடியாது

அப்புறம் ஏன் பாஜக பிஆர்ஓ மூலம் அழைப்பு விடுக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, நான் அழைப்பதில்லையே என்றும் தெரிவித்தார். அண்ணாமலை தவறு செய்து விட்டதாக நினைத்தால் என் செய்தியை  தவிர்ப்பதற்கான உரிமை உண்டு எனவும் கூறினார். மேலும் பத்திரிகையாளர்களை  பார்த்து ஆயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் என சொன்னது குறித்தும் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதில் அளித்த அவர்,  அப்படி பணம் வாங்கும்  பத்திரிக்கையாளரை அம்பலப்படுத்தவேன் என தெரிவித்தார். அப்படி சொன்னதற்கான காரணத்தை வெளிப்படுத்துவேன் என கூறினார்.

கோவையில் மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்த திட்டம்..? ஆணி, பாஸ்ராஸ் குண்டுகளை காண்பித்து அண்ணாமலை ஆவேசம்

Annamalai said that he will not apologize for comparing journalists to monkeys

பத்திரிக்கையாளர் - பாஜக மோதல்

அதை செய்வதில் யாருக்கும் பிரச்சினை இல்லை என தெரிவித்த பத்திரிக்கையாளர்கள் பணம் வாங்கியவர்களை அம்பலப்படுத்த வேண்டயதுதானே? எல்லோரையும் ஏன் ஒன்றாக பேசுகின்றீர்கள் என அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலையிடம் கேள்வி கேட்டதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்களை திட்டினர். இது குறித்தும் அண்ணாமலையிடம் முறையிட பட்டது. ஆனால் இவற்றை கண்டு கொள்ளாமல் அண்ணாமலை கடந்து சென்றார். 

இதையும் படியுங்கள்

ஒரே ஒரு போன் கால்..! அரசு நிகழ்ச்சிகள் ரத்து..! கே.என் நேரு உத்தரவிற்காக திருச்சிக்கு ஓடிய அன்பில் மகேஷ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios