வட்டாட்சியரை கை,கால்களை வெட்டுவேன் என மிரட்டுவதா.? விசிக நிர்வாகிக்கு தைரியம் எங்கிருந்து வந்தது.? அண்ணாமலை

வட்டாட்சியரை கை, கால்களை வெட்டுவேன் என மிரட்டல் விடுக்கும் அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளருக்கு தைரியம் எங்கிருந்து வந்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

Annamalai requests to take action against the executive of the Viduthalai Chiruthaigal Katchi who threatened the District Commissioner

வட்டாட்சியரை மிரட்டிய விசிக

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதையடுத்து. கொடி கம்பத்தை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள்  மறுத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையின் உதவியோடு கொடிக்கம்பத்தை அகற்ற வட்டாட்சியர் இந்திரா சென்றுள்ளார் . இதனால் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தனபாலுக்கும் வட்டாட்சியர் இந்திரா இடையே மோதல் ஏற்பட்டது.  அப்போது மாஜிஸ்திரேட் என்றால் என்ன. ?கொடிக்கும்பத்தில் யாராவது கை வைத்தால் எவனா இருந்தாலும் கை கால்களை வெட்டுவேன்,  உனக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஒருமையிலும் தகாத வார்த்தையிலும் வட்டாட்சியரை விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் திட்டி உள்ளார்.

இதை மட்டும் செய்து காட்டுனீங்கனா அரசியலை விட்டு விலக தயார்... இபிஎஸ்க்கு சவால் விடும் வைத்தியலிங்கம்

Annamalai requests to take action against the executive of the Viduthalai Chiruthaigal Katchi who threatened the District Commissioner

வட்டாட்சியருக்கு மிரட்டல்

இதனை எடுத்து வட்டாட்சியர் இந்திரா விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தனபால் மீது சின்ன சேலம் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலை தளத்தில் பரவி வரும் நிலையில்  இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்,  கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் திருமதி இந்திரா அவர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.  அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட பெண் வட்டாட்சியரை, காவல்துறை முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது? 

 

சமூக விரோதிகளுக்கான ஆட்சியா?

திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா?  உடனடியாக, பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios