முதலமைச்சர் குடும்பத்துடன் சென்று ஐபிஎல் போட்டி பார்த்தால் மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வம் பெருகாது- அண்ணாமலை

புதுச்சேரியிலிருந்து தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பள்ளிகள் அணி தேர்வாகியிருக்கும் நிலையில், தமிழக அணித் தேர்வு இன்னும் நடைபெறாமல் இருப்பது தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கையாலாகாதத்தனத்தைக் காட்டுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

Annamalai questioned why students of Tamil Nadu were not selected to participate in the national level sports competition

மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி

பள்ளி மாணவர்களுக்கு இடையேயான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தமிழக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், டில்லியில் நடைபெறவிருக்கும், பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பில் வீரர்களைத் தேர்வு செய்யாமல் இருப்பதால், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க இயலாமல் இருக்கின்றனர் என்ற நாளிதழ் செய்தி கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், தேசிய அளவிலான போட்டிகள் என்பது கனவு. அந்தக் கனவை சீர்குலைத்திருக்கிறது திறனற்ற திமுக அரசு. புதுச்சேரியிலிருந்து தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பள்ளிகள் அணி தேர்வாகியிருக்கும் நிலையில், 

Annamalai questioned why students of Tamil Nadu were not selected to participate in the national level sports competition

தமிழக மாணவர்கள் தேர்வு செய்யப்படாதது ஏன்.?

தமிழக அணித் தேர்வு இன்னும் நடைபெறாமல் இருப்பது தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கையாலாகாதத்தனத்தைக் காட்டுகிறது.  பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான வாய்ப்புகளை வழங்காமல், முதல்வர் குடும்பத்துடன் சென்று ஐபிஎல் போட்டிகள் பார்த்தால், பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் பெருகிவிடாது என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், விளையாட்டு வீரர்களின் கனவுகளோடு விளையாட வேண்டாம் என்றும், தமிழக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தனியார் மயமாக்கும் உள் நோக்கில் பணியார்கள் நிரப்பப்படாததே ரயில் விபத்திற்கு காரணம்! - தொல் திருமாவளவன் சாடல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios