Asianet News TamilAsianet News Tamil

விமானத்தில் பொறுப்பில்லாமல் எமர்ஜன்சி கதவை திறந்து விளையாடியிருக்கிறார்... செந்தில் பாலாஜி குறிப்பிடுவது யார்?

போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விளையாடியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மறைமுகமாக குற்றம்சாட்டிய டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. 

annamalai irresponsibly opened the emergency door in the plane says senthil balaji
Author
First Published Dec 29, 2022, 10:50 PM IST

போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விளையாடியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மறைமுகமாக குற்றம்சாட்டிய டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நான் கட்டியிருப்பது ரபேல் வாட்ச். 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. அதில் நான் கட்டியிருப்பது 149வது வாட்ச் என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதுக்குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் பிரான்ஸ் நிறுவனம் சார்பில் உலகளவில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் கைகடிகாரத்தை கட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க: விமர்சனங்களுக்கு செயல்பாடுகளால் பதில் அளித்துள்ளார் உதயநிதி - முதல்வர் பெருமிதம்

அதற்கான ரசீசை வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவர் விமானத்தில் பொறுப்பே இல்லாமல் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியிருக்கிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், கடந்த 10 ஆம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பை கையாளும் உதயநிதி.. ஒரே போடு போட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே அண்ணாமலைக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது அவரது இந்த டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios