அதிமுகவினர் என்ன புகார் வேண்டும் என்றாலும் சொல்லட்டும்..! எனக்கு கவலையில்லை- கூலாக பதில் சொன்ன அண்ணாமலை

ஆன்-லைன் சூதாட்ட மசோதா தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதத்துடன் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு தெளிப்படுத்த வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Annamalai has said that he is not worried about the complaints made by AIADMK members against him

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

சென்னை  விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ஆன்-லைன் சூதாட்ட மசோதாவை கவர்னர் ஏன் திரும்பி அனுப்பினார் என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொது தேர்வு எழுதினால் அந்த விடை தாளை பணம் கட்டி நகலை பெறுவோம். எனவே அதே போல ஆன்-லைன் சூதாட்ட மசோதாவை ஏன் ஆளுநர் திருப்பி  அனுப்பினார் என்ற கடிதத்துடன் தமிழக அரசு வெளியிட வேண்டும். சட்டமன்றத்தில் மீண்டும் கூட்டி சட்டத்துக்குட்பட்டு மசோதாவை அனுப்ப வேண்டும். ஆன்-லைன் சூதாட்டத்திற்கு எதிராக கவர்னர் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கவர்னர் அறிவுறுத்தியது போல் சட்ட மசோதா  இருக்க வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை காலிசெய்து விடுவார் - கடம்பூர் ராஜூ விமர்சனம்

Annamalai has said that he is not worried about the complaints made by AIADMK members against him

கடிதம் எழுதியது ஏன்.?

மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் வரவேற்று உள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக தனியாக கடிதம் எழுதி உள்ளது. டெல்லி மதுபான ஊழல் போல் தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு வந்து விடும் என மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். இதனால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக அமர்ந்து பேசி ஒரு புரிதலுக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

Annamalai has said that he is not worried about the complaints made by AIADMK members against him

அதிமுக புகார்-கவலை இல்லை

தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்கான பணிகளை செய்வது தான் எனது பணி, அண்ணாமலை 38 ஆண்டுகளில் எப்படி இருந்தேனோ அது போல் இருப்பேன். அண்ணாமலையை மாற்ற முடியாது.அதிமுகவினர் என் மீது புகார் கூறினாலும் கவலைப்பட மாட்டேன். கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்கள். மேஜேனர்கள் அல்ல. தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். எனது பணியும் தலைவராக தான் இருக்கும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆளுநரே உங்கள் கைகளில் படிந்திருப்பது மரணத்தின் கறை.. அதை ஒருபோதும் உங்களால் கழுவவே முடியாது.. ஜோதிமணி ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios