16 மாதம் தான் உள்ளது.! தமிழகத்தில் மாற்றம் உறுதி..! 25 எம்பிக்கள் டெல்லி செல்வார்கள்.! அடித்து கூறும் அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் தான் உள்ளது. நேரம் வந்துவிட்டது. களத்தில் இறங்க வேண்டும். வீடு வீடாக செல்ல வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வர போகிறது. 25 எம்பிக்கள் டெல்லி செல்வார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார்.
பால் விலை உயர்வு - பாஜக போராட்டம்
பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள்எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாலை ஊற்றும் விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை, பாலை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அதிகம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், ஆவின் நிறுவனம் திவாலான நிறுவனம் கமிஷனுக்காக நடத்தப்படும் துறையாக இருப்பதாக தெரிவித்தார். அமைச்சர் நாசருக்கு வாயில் கோளாறு, முதல்வருக்கு ஆட்சியில் கோளாறு எனவும் விமர்சித்தார். மக்கள் பயன்படுத்தும் பாலுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் அமைச்சர் என்னவென்று தெரியாமல் உளறுவதாக தெரிவித்தார்.
லவ் டுடே படம் பார்க்கும் முதல்வர்
விலை உயர்வு, விலை உயர்வு, விலை உயர்வு இதுதான் திமுக அரசின் தாரக மந்திரம் என குறிப்பிட்டார். தினமும் 43 லட்சம் லிட்டர் பால் வாங்குவதாக அமைச்சர் கூறுகின்றார். ஆனால் 37 லட்சம் லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது தான் திராவிட மாடல் அரசு எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் உள்ளதாக தெரிவித்தவர். இது போன்ற மோசமான ஆட்சியை இதுவரை பார்த்தது கிடையாது என கூறினார். தமிழகத்தில் பெய்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு அவதியாகியுள்ளனர். ஆனால் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முதலமைச்சர் குடும்பத்துடன் லவ் டுடே படத்தை பார்ப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் வெளியாகவுள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி உதயநிதி வாங்குகிறார். விளம்பர முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
திராவிட மாடலா.? வெறுப்பு மாடாலா..? வாக்குறுதிக்கு எதிராக இரட்டை வேடம் போடும் திமுக..! ஓபிஎஸ் ஆவேசம்
திமுக ஆட்சி- மக்களுக்கு அவமானம்
தமிழக முதல்வருக்கு ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகனும் என நினைப்பு. ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லை, நரேந்திரமோடி தனது குடும்பத்தைக்கூட அருகில் வைத்துக்கொள்ளவில்லை. தனது தாயார் பிரதமர் கூட இல்லாமல் அகமதாபாத்தில் உள்ளார். ஆனால் தமிழகத்தில் அனைத்து நிகழ்வுகளிலும் முன் வரிசையில் முதல்வரின் குடும்பம் தான் அமர்கின்றனர். எனவே மோடியில் நகத்திற்கு கூட முதலமைச்சரால் ஈடு ஆகமுடியாது என குறிப்பிட்டார். தமிழக மக்கள் திமுகவின் ஏமாற்று பேச்சில் இருந்து வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொண்டவர். தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ளது. நேர்மையாக இருக்க வேண்டும் நினைக்கும் மக்களுக்கு அவமானம் என தெரிவித்தார். அந்த கட்சியை அப்புறப்படுத்த வேண்டும் அதற்க்கு கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு மத்திய அரசு மீது பழி போடும் திமுக..! இறங்கி அடிக்கும் குஷ்பு
25 எம்பிக்கள் உறுதி
தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் என அமைச்சர்கள் கூறுவதாக தெரிவித்தவர். தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் தான் பால்விலை, மின்கட்டண விலை, சொத்து வரி உன பல்வேறு கட்டணங்களை உயர்த்தினாரா என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் தான் உள்ளது. நேரம் வந்துவிட்டது. களத்தில் இறங்க வேண்டும். வீடு வீடாக செல்ல வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வர போகிறது. 25 எம்பிக்கள் டெல்லி செல்வார்கள். இன்றும் 16 மாதங்கள் இதே போல தினமும் போராட்டங்கள் நடைபெறும் பாஜக எம்பிக்கள் டெல்லி செல்லும் வரை தொடரும் என குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்