”சுடுமணலில் காலை வைத்தது மாதிரி சுக்குன்னு இருந்தது. வேலைக்காரி இடுப்பை பிடித்த மாதிரி கிளுக்குன்னு இருந்தது” வக்கிரப் பேச்சால் சர்ச்சை.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் யூடியூப்பர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் பிலிப் பிலிப் தமிழ் என்ற யூடியூப் சேனலில் திமுக அனுதாபியான குருபாய் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து அண்ணாத்த படத்தை கெட்டை வார்த்தைகளால் மிக மோசமாக விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த விமர்சனத்தில், ‘’ நம்மவீட்டு பிள்ளை படம் வரும்போது** போன’ அப்படினு கேட்டால் என்ன சொல்லலாம். காளையன் வந்து உட்கார்ந்து தனது வசனங்களை ஆரம்பிக்கிறார். ஒரு ரெண்டே முக்கால் மணி நேரம் ஒரு குடிகார ** கிட்ட மாட்டிக்கொண்ட மனநிலை இருந்தது. சுடுமணலில் காலை வைத்தது மாதிரி சுக்குன்னு இருந்தது. வேலைக்காரி இடுப்பை பிடித்த மாதிரி கிளுக்குன்னு இருந்தது. சாதரணமா சொல்லனும்ணா இந்த வெரைச்ச மண்டக்காரனுக்கு புரியலையா.? என கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி படுகேவலமாக விமர்சித்துள்ளனர்.

இது பார்ப்பவர்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக கலை, பண்பாட்டு பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அவர் தாதா சாஹேப் பால்கே அவார்டு பெற்றவர். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக ரசிகர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பெரிய மனிதரைப் பற்றி இந்த இரண்டு தகுதியற்றவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பெரியவர்களை மதிக்காத பகுத்தறிவாளர்களான இவர்களை திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் ஆதரிக்கின்றனர் என்று கூறியுள்ளார் 

Scroll to load tweet…

 முதல்வரும் ஆதரிக்கிறார். இதை ஒரு நடிகரோ, சினிமா சங்கமோ கண்டிக்க முன்வருவதில்லை. அவர்களுக்கெல்லாம் தி.மு.க.வுக்கு பயமா அல்லது மொத்தத் துறையும் தி.மு.க குடும்பத்துக்காக உழைக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பலரும் இவர்களை கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ‘’ ரஜினி சாரை இந்தளவுக்கு இழிவுபடுத்தி பேசியிருக்கானுங்க... ஆனா எந்த முன்னனி ஹீரோக்களும் மற்ற நடிகர்களும் அவர்களை கண்டிக்கிற மாறி தெரியல. இத்தனை புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சன் பிக்சர்ஸ்ம் அமைதி காக்கிறது..

Scroll to load tweet…

டுவிட்டரை சுத்தம் பண்ண வந்த உத்தமர் டுவிட்டரில் இருக்கும் பெண்களின் பாதுகாவலர் யாராவது கெட்ட வார்த்தை பேசுனா போலீஸ்க்கு டேக் பண்ண வைக்கும் நல்லவர் குடும்ப உறவுகளை கொச்சைப்படுத்தும் இந்த ஆபாசவாதிகளை எப்போ கைது பண்ண சொல்வீங்க எம்.பி’’ என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த யூடியூப் சேனலை நடத்தி வரும் குருபாய் என்பவர் திமுகவை சார்ந்தவர் என்று கூறி. மு.க.ஸ்டாலினுடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.