கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளை அண்ணா  பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மையத்தின் மூலம் கண்டறிந்து வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அம்மையத்தின்  இயக்குனர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ,  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  தமிழகத்தில் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் ,  தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை  தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது 

மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியை சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றளவில் உள்ள மக்கள் கணக்கெடுக்கப்பட்டு அப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியில் செல்லவோ ,  வெளியாட்கள் யாரும் உள்ளே வரவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை  தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது .  இந்த பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தாலும் , நோயாளிகளின் பகுதிகளை வரையறுப்பது சிக்கல் நிறைந்ததாகவே உள்ளது . எனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொலை உணர்வு மையத்தின் மூலம் கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .  ஏற்கனவே இம்மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருக்கள் வீடுகள் உள்ளிட்ட புவியியல் வரைபடம்  சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன .

 

எனவே இதை பயன்படுத்தி நோய் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் பகுதியை  சுற்றி எந்தெந்த தெருக்கள் வருகின்றன , எத்தனை வீடுகள் இருக்கின்றன , உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் தயார் செய்து அளிக்கின்றனர் .  அதனடிப்படையில் மக்கள் நலவாழ்வுத் துறையினர் பாதுகாக்கப்பட்ட பகுதியினை வரையறை செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் ,  இந்நிலையில் இது குறித்து தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மையம்த்தின் இயக்குனர் ராமகிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை  உணர்வு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பொறியியல் வரைபடங்கள் உள்ளன இந்த வரைபடங்களில் கிராமத்தில் உள்ள தெருக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன .

இன்னும் செயற்கைக்கோள் வரைபடத்தின் மூலமும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வகையான வீடுகளும் குறிக்கப்பட்டுள்ளது . இந்த தகவல்கள் அனைத்தும் பொது சுகாதாரத் துறையிடம் அளிக்கப்படும் , இந்த தகவலின் அடிப்படையில் நோய்த்தொற்று உள்ளவர் வசிக்கும் பகுதியை சுற்றி பாதுகாக்கப்பட்ட தூரத்தில் வரும் தெருக்கள் மற்றும் வீடுகளின் விவரத்தினை அளித்து வருகிறோம் .  அதனையடுத்து நோய் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசுத்துறைகள் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார் .