தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு வித்திட்டவர் அண்ணா. 1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்த அண்ணா, மூடநம்பிக்கைகளை எதிர்த்து சமூகநீதியை நிலைநாட்ட போராடி திராவிட அரசியலை முன்னெடுத்து வெற்றி கண்டவர்.

தமிழகத்தில் தற்போது அழிக்க முடியாத ஆலமரமாக வளர்ந்து நிற்கும் திராவிட அரசியலுக்கு வித்திட்டவர் அண்ணா. அண்ணாவின் 109-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். சிலைக்கு கீழே இருந்த அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.