Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் உடல் தகனம் !! ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி !!!

anitha funeral
anitha funeral at kulumur...staline, vijayakanth, thirumavalavan participate
Author
First Published Sep 3, 2017, 6:37 AM IST


நீட் தேர்வின் படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்த, டாக்டராகும் கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்த  அனிதா கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவரது தந்தை சண்முகம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

anitha funeral at kulumur...staline, vijayakanth, thirumavalavan participate

சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக கஷ்டப்பட்டு  படித்து வந்தார் அனிதா. ஆனால் நீட் தேர்வு மூலமே மருத்துவ கவுன்சீலிங் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதால் அவரின் மருத்துவ கனவு தகர்ந்து போனது.

இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

anitha funeral at kulumur...staline, vijayakanth, thirumavalavan participate

தனத டாக்டர் கனவு கருகிப்போனதால் மனமுடைந்த அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

அனிதாவின் உடலுக்கு  அரசியல் கட்சிகளை சேர்ந்த பல தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தொல். திருமாவளவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், அரவு 9 மணிக்கு குழுமூருக்கு நேரில் வந்து அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், தி.மு.க. சார்பில் அவரது குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.  

anitha funeral at kulumur...staline, vijayakanth, thirumavalavan participate

இந்நிலையில் இரவு  11 மணியளவில் அனிதாவுக்கு  ஈமைச்சடங்குகள்  நிறைவேற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு அனிதாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என  ஆயிரக்கணக்கானோர், ஊர்வலத்தில் பங்கேற்றனர். பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர்கள் முழக்கம் எழுப்பினர்.

anitha funeral at kulumur...staline, vijayakanth, thirumavalavan participate

இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செய்தனர்.

இதைத் தொடர்ந்து அனிதாவின் உடலுக்கு அவரது உறவினர்கள் தகனம் செய்தனர். ஒரு சிறந்த மருத்துவரை நாடு இழந்துவிட்டது என்றும் இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என பொது மக்களும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios