ஆபாச படத்துக்கு அடிமையான கணவன் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச படத்தில் இருந்த பெண்ணும் தனது மனைவியும் ஒரே மாதிரி இருந்ததால் அந்த ஆத்திரத்தில் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
ஆபாச படத்துக்கு அடிமையான கணவன் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச படத்தில் இருந்த பெண்ணும் தனது மனைவியும் ஒரே மாதிரி இருந்ததால் அந்த ஆத்திரத்தில் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொலை, கற்பழிப்பு, வரதட்சனை கொடுமை, பாலியல் சீண்டல் character assassination என பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கணவனுக்கு மனைவியின் மீது ஏற்பட்ட அதித சந்தேகத்தின் பேரில் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவது ஆபாச படம் மற்றும் வீடியோ பார்ப்பதற்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். தான் பார்த்த ஆபாச படத்தில் வந்த பெண் தனது மனைவியைப் போலவே இருப்பதால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது மனைவி ப்ளூ ஃபிலிம் நடிப்பதாக சந்தேகம் அடைந்தார். இதனால் அந்த பெண்ணை கத்தியால் குத்தி உள்ளார். இதுகுறித்து பெங்களூர் போலீசார் கூறுகையில், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஜாகீர் பாஷா (40) பெங்களூரில் வசித்து வருகிறார். இவருக்கும் முனிபா (35) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் பெங்களூரில் தங்கி வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் ஆனது முதல் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஜாகீர் பாஷா தனது மனைவியை வழக்கத்துக்கு மாறாக அதிக கொடுமைப்படுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் எல்லோருக்கும் முன்பாகவும் தனது மனைவியை அடித்து உதைத்து அவமானப்படுத்தினார். இது உள்ளூர் ஊடகங்களில் செய்தியாகவும் வந்தது. ஆனால் எதற்காக கணவர் இப்படி அடிக்கிறார் என்று உறவினர்கள் திகைத்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களாக மனைவியை ஜாகீர் பாஷா அதிகமாக கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவரது தந்தை போலீசில் புகார் கொடுக்க முயன்றார்.

ஆனால் குடும்பத்தினர் வேண்டாம் என தடுத்து விட்டனர். இந்நிலையில் தன் மனைவியின் மீது ஆத்திரம் அடங்காத ஜாஹிர் பாஷா, அவரது மனைவியை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
