மனைவியை கடந்த மூன்று மாத காலமாக கோணிப்பை ஊசியால் குட்டி சித்திரவதை செய்து அடித்து துன்புறுத்தி கொலை செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த சைக்கோ கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மனைவியை கடந்த மூன்று மாத காலமாக கோணிப்பை ஊசியால் குட்டி சித்திரவதை செய்து அடித்து துன்புறுத்தி கொலை செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த சைக்கோ கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் நேரு நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருபவர் பிரம்மா இவரது மனைவி ரஷியா கத்துனா இருவரும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னை அம்பத்தூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கி வசித்து வருகின்றனர் ஒரிசா மாநிலத்தில் இருந்து வயிற்றுப் பிழைப்பு தேடி வந்த பிரம்மா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வேலை செய்து வந்தார். இந்நிலையில் தனது மனைவி கத்துனா தன்னைவிட அழகாக இருந்ததால் அவர் மீது பிரம்மாவுக்கு சந்தேகப் பார்வையை ஏற்பட்டது.

இந்நிலையில் மனைவியை தினந்தோறும் வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் பிரம்மா, அதேபோல் சில நேரங்களில் வீட்டைப் பூட்டாமல் மனைவியை விட்டு செல்வது போல நடித்து பிறகு மீண்டும் வீட்டின் பின்புறமாக வந்து மனைவி ரஷ்யா கத்துனாவை நோட்டமிட்டு வந்தார். தொடர்ச்சியாக அவரின் நடவடிக்கைகள் அவரது மனைவிக்கு மன உளைச்சலையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது இதனால் கணவன் பிரம்மாவை ரஷியா கத்துனா திட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு வாக்குவாதம் ஆனது, இதனால் வேலைக்கு சென்ற கணவன் குடித்துவிட்டு வந்து மனைவி ரஷியா கத்துனாவை கோணி ஊசியால் குத்திக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வேதனையில் தவித்து வந்த ர ரஷியா கத்துனா தனக்கு அம்பத்தூரில் உறவினர்கள் யாரும் இல்லாததால் அக்கம்பக்கத்தினரிடம் கணவன் தனக்கு செய்யும் கொடுமை குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கணவன்-மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். பலமுறை சமாதானம் செய்து வைத்த நிலையிலும் கணவன் பிரம்மாவின் சந்தேக புத்தி ஓயவில்லை. இந்நிலையில் தினந்தோறும் குடித்துவிட்டு ரஷியா கத்துனாவை ஊசி மற்றும் கூர்மையான ஆயுதங்களையும் கொண்டு தாக்கியுள்ளர். இதில் ரசியா மயக்கமடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரஷியா கத்துனா உயிரிழந்தார். இதனால் கணவன் பிரம்மா தலைமறைவானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கணவன் பிரம்மாவை கைது செய்துள்ளனர். தன் மனைவி அழகாக இருக்கிறார் என யாரேனும் கூறினால் அது தனக்கு பிடிக்காது என்றும், அதனால்தான் தன் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு யாரிடமும் பேச வேண்டாம் எனக் கூறி சித்திரவதை செய்ததாகவும் தான் செய்த குற்றத்தை பிரம்மா ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
