நேற்று அக்ராஹாரா சிறையில் இருக்கும் சின்னம்மாவை நலம் விசாரித்துவிட்டு வெளியே வந்த தினகரன் செந்தில்பாலாஜி பற்றியும், தங்க.தமிழ்ச்செல்வன் பற்றியும் கேள்வி கேட்டதற்கு, 'யாரு  போனாலும் இந்த இயக்கம் அப்படியேதான் இருக்கும்...' என மீடியா முன்பு குமுறினார். அப்போது சைலண்ட்டாக இருந்த ஆண்டிப்பட்டி தங்கம் முகம் 0  வாட்ஸ் பல்ப் போல சுருங்கியது.  

இரவு பெங்களூரு ஹோட்டலில் ஆண்டிப்பட்டி தங்கத்துடன் பேசிய தினகரன், 'சின்னம்மாகிட்ட நான் நடந்தது எல்லாம் சொல்லி அழுதுட்டேன். செந்தில்பாலாஜியை வீட்ல ஒருத்தர் மாதிரிதான் சின்னம்மா பார்த்துகிட்டாங்க. அவரு போனதை நம்ம சின்னம்மாவால தாங்கிக்கவே முடியல. செந்தில் பாலாஜியை என்னோட தம்பி மாதிரி பார்த்துக்கிட்டேன், ஆனா அவரு இப்படி பண்ணிட்டு போயிட்டாரு,  உங்களை இழுக்க பல முயற்சி நடக்கும். ஆனால் அது உங்க எதிர்காலத்துக்கு நல்லது இல்ல...' என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு ஆண்டிப்பட்டி தங்கமோ, 'நான் எதிர்காலத்தை பற்றி யோசிக்கவே இல்ல.  சல்லி காசு இல்லாம செலவுக்கே கஷ்ட்டப்பட்டு வேண்டியதா இருக்கு. மெயின் தலைகளை பதவி ஆசை காட்டி தட்டி தூக்குறாங்க, ஏன் என்கிட்டயே டீல் பேசுறாங்க.  அது பரவால்ல, நான் அப்படி இப்படின்னு இன்னும் 5 வருஷம் கூட நான் சமாளிப்பேன். ஆனால் என்னை நம்பி இருக்கிறவங்க என்ன ஆவாங்க? கையில இருந்த காசு காலி  பண்ணிட்டு இருக்காங்க, எந்த வருமானமும் இல்லாமல் நான் எப்படி செலவு மட்டுமே பண்ணிட்டு இருப்பாங்க?

நாலு காசு பாக்க, நானும் ஏதாச்சும் செஞ்சி தான ஆகணும்?  என்று ஆண்டிப்பட்டி தங்கம் சொல்ல... ' டதற்கு தினகரனோ, கொஞ்சம் பொறுத்துக்கோங்க... எல்லாமே மாறும்..' என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகுதான் தினகரன் கிளம்பி இருக்கிறார். ஆனாலும் ஆண்டிப்பட்டி தங்கம் விஷயத்தில்  இன்னும்  அலாட்டாவே இருக்கிறாராம் தினகரன். ' நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு பதிலை ஆண்டிப்பட்டி தம்பி ரெடியா வெச்சிருக்கு. என்ன நடக்கும்னு தெரியலை. 

ஆனால், செந்தில்பாலாஜி போனது, ஆண்டிப்பட்டி தம்பி பிரச்னை பண்றதுன்னு எல்லாத்துக்கும் பின்னாடி பிஜேபி ஆட்கள் யாரும் இருப்பாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. பிஜேபிக்கு நம்மள அதிமுகவுடன் சேர்க்க தலையால தண்ணி குடிக்கிறாங்க.  அதற்காக அமமுகவில் தூணாக இருக்கும் ஒவ்வொருத்தரையா பிரிக்கின்ற வேலையை தொடங்கிட்டாங்கலோன்னு சந்தேகமா இருக்கு என நாலு நாளாய் நொந்து வெந்து போயுள்ளாராம் தினகரன்.

என்னதான் தினகரன் சமாதனப் படுத்தினாலும், அமைச்சர் தங்கமணி பேசிய டீல், ஓரிரு நாளில் ஓகே ஆகும், அப்படி இல்லையென்றால் திமுகவில் செந்தில் பாலாஜி மூலமா தூது விட்டு சேர்ந்துக்க வேண்டியது தான் நல்லது என தனது ஆதரவாளர்களை ரெடியாக இருக்குமாறு அலர்ட் மெசேஜ் போட்டுள்ளாராம் ஆண்டிப்பட்டி தங்கம்.