Asianet News TamilAsianet News Tamil

அண்ணன் ஒஸ்தன்னாடு... தீதி ஆஸ்ச்சே... ஆந்திரா- மே.வங்கத்தை தமிழகத்தில் காப்பியடிக்கும் ஐ-பேக்..!

"ஸ்டாலின் வருகிறார்" என்கிற பெயரில் தி.மு.கவின் அடுத்த 100 நாள்  தேர்தல் பிரச்சார திட்டம் என்ன? ஐபேக் ஆந்திரா தேர்தலில் பயன்படுத்திய அதே பெயர்"
 

Andhra-West Bengal Tamil Nadu copy I-pac
Author
Tamil Nadu, First Published Jan 11, 2021, 11:26 AM IST

"ஸ்டாலின் வருகிறார்" என்கிற பெயரில் தி.மு.கவின் அடுத்த 100 நாள்  தேர்தல் பிரச்சார திட்டம் என்ன? ஐபேக் ஆந்திரா தேர்தலில் பயன்படுத்திய அதே பெயர்"

தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் ஐ -பாக்  நிறுவனம் வகுத்து கொடுத்த பெயரில் திமுகவும் கிராம சபை கூட்டம் போன்ற பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது. 

Andhra-West Bengal Tamil Nadu copy I-pac

தேர்தல் வரை நூறு நாட்கள் என்ற பிரச்சார யுக்தியை ஐபேக் நிறுவனம் வகுத்துள்ளது. இதற்கு ’ஸ்டாலின் வருகிறார்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தை 4 கட்டங்களாக நடத்த தி.மு.க திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தில் கலந்துரையாடல், சந்திப்பு உள்ளிட்ட 13 விதமான நிகழ்ச்சிள் திட்டமிடப்பட்டுள்ளது. ஐபேக் வகுத்து கொடுத்த திட்டங்களில் இந்த திட்டம் மிகவும் பெரிதாக இருக்கும் என கூறப்படுகிறது. Andhra-West Bengal Tamil Nadu copy I-pac

நியூமராலஜியில் அதிக நம்பிக்கை கொண்ட பிரஷாந்த் கிஷோர் அனைத்து வகையான பிரச்சாரத்திற்கும் இரண்டு வார்தைகளை கொண்ட தலைப்புகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். ’ஒன்றிணைவோம் வா’, ’எல்லோரும் நம்முடன்’, ’அதிமுகவை எதிர்ப்போம்’, ’விடியலை நோக்கி’என்ற வரிச்சையில் தற்போது ’ஸ்டாலின் வருகிறார்’இணையவுள்ளது. திராவிட கட்சி ஒன்றுக்கு பிரச்சார யுக்தியை வகுத்துக்கொடுக்கும் ஒரு நபர் இப்படி மூடநம்பிகையின் அடிப்படியில் முடிவுகளை எடுப்பது கட்சி தலைவர்களையே  கடுப்பாக்கியுள்ளது.

Andhra-West Bengal Tamil Nadu copy I-pac

ஏற்கனவே ஆந்திராவில் ’அண்ணன் ஒஸ்தன்னாடு’ (அண்ணன் வருகிறார்) என்ற ஐடியாவை ஐபேக் கொடுத்தது. அதேபோல, மேற்கு வங்கத்திலும், ’தீதி ஆஸ்ச்சே” (அக்கா வருகிறார்) என்னும் பெயரை சூட்டியது. ஐபேக் நிறுவனம் புதிய திட்டங்களை வகுக்காமல் வேறு மாநிலங்களில் பயன்படுத்திய அதே யுக்தியை தமிழகத்திலும் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் வேறு மாநிலங்களில் வைத்த அதே பெயர்களை மொழி மட்டும் மாற்றி அரைத்த அதே மாவை அரைத்துள்ளது  ஐ பாக் எனக் கூறுகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios