நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஆந்திர  மாநிலத்தில் ஒரு  கப்  டீயால் சுமார் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதில் இந்தியாவில் 42 ஆயிரத்து 670  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ,  இதுவரையில் நாடு முழுவதும் 1395 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் , சுமார் 11 ஆயிரத்து 282 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் .  இந்நிலையில் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது ,  இந்நிலையில்  ஒரளவுக்கு பாதுகாப்பாக  இருந்து வந்த ஆந்திர மாநிலத்தில் சுமார் 1573 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது .இந்நிலையில் அங்கு 33 பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் 

அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது .  இதனால் அங்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் எடுத்து வருகிறார் ,  இந்நிலையில்  ஒரு கப் டீயால் சுமார் 40 பேருக்கு கொரோனா பரவியுள்ள சம்பவம்  அம்மாநிலத்தில்  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் நரசராபேட்டையில் திடீரென வைரசால்   45 வயதான கேபிள்  ஆபரேட்டர் ஒருவர் உயிரிழந்தார், அவருக்கு திடீரென  கொரோனா எப்படி வந்தது என போலீசார் விசாரித்தனர்,  அவருக்கு கொரோனா  பரப்பிய நபரை முழுமையான விசாரணைக்குப் பின் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் , அதாவது கேபிள் அபரேட்டர்  நசரத்பேட்டை மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மருத்துவர்கள்  குண்டூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்  அங்கு ஏப்ரல் 9ஆம் தேதி அவர் உயிரிழந்தார் ,  பின்னர் ஏப்ரல் 10-ஆம் தேதி அவர் கொரோனா வைரசால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .  

இதையடுத்து கேபிள் ஆபரேட்டருக்கு கொரோனா  எப்படி பரவியது  என்பது குறித்து விசாரணை நடந்தது ,  அதில் குண்டூரைச்  சேர்ந்த 7 பேர் தில்லி சென்று திரும்பியுள்ளனர் ,  அவர்களில் ஏழாவது நபர் தனது பெற்றோரை பார்க்க நாசராபேட்டையில் உள்ள ஷாலோம் நகருக்கு வந்துள்ளார் . வரும் வழியில் பேருந்து நிலையத்தில் உள்ள கடையொன்றில் அவர் டீ குடித்துள்ளார் ,  அதேசமயம் அங்கு கடைக்கு வந்த கேபிள் ஆபரேட்டரும் அங்கு டீ  குடித்துள்ளார்,  அப்போதுதான் டெல்லி சென்று வந்த நபர் மூலம் கேபிள் ஆபரேட்டருக்கு  தோற்று பரவியது தெரியவந்தது . இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த ஏழாவது நபர் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் ,  இந்நிலையில் கேபிள் ஆபரேட்டர் மூலம் குடும்ப  உறுப்பினர்கள் 5 பேர் ,  நண்பர் ஒருவர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக  24 பேர் என மொத்தம் 40 பேருக்கு கொரோனா பரவியது தெரியவந்தது ஒரு கப் டீயால் ஆந்திர மாநிலத்தில்  40 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.