Asianet News TamilAsianet News Tamil

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை சந்தித்தது தமிழக அமைச்சர் குழு..!!

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது,இருந்த போதிலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடக்கோரியும் தமிழக அமைச்சர்கள் ஆந்திர முதல்வரை சந்தித்திருக்கிறார்கள்.

Andhra Pradesh Chief Minister Jaganmohan meets
Author
Tamil Nadu, First Published Mar 4, 2020, 10:39 PM IST

T.Balamurukan

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது,இருந்த போதிலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடக்கோரியும் தமிழக அமைச்சர்கள் ஆந்திர முதல்வரை சந்தித்திருக்கிறார்கள்.

Andhra Pradesh Chief Minister Jaganmohan meets

இந்த ஆண்டு, ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா நதியில் இருந்து  தண்ணீரை தமிழகத்திற்கு ஆந்திரா அரசு வழங்கி உள்ளது. கண்டலேறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கூடுதலாக கிருஷ்ண நதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

Andhra Pradesh Chief Minister Jaganmohan meets

இந்த நிலையில் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் பெறுவது தொடர்பாக ஆந்திர முதலமைச்சரை சந்திக்க அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, ஜெயக்குமார் ஆகியோர்  சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஆந்திரா சென்றனர்.சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதலாக நீர் திறக்க ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் நேரில் வலியுறுத்தினர். கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் அளித்த கடிதத்தையும் ஆந்திர முதலமைச்சரிடம் வழங்கினர். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios