நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த பாரிவேந்தர் மற்றும்  துரைமுருகன் கோஷ்டி பண்ண வேலையால் தேர்தல் ரத்தான சோகத்தில் இருக்கும் ஏசி சண்முகம் ஆகிய இருவரையும் கோர்த்துவிடும் விதமாக புள்ளி விவரத்தோடு தெறிக்கவிட்டுள்ளார் அன்புமணி.

நீட் தேர்வு குறித்தும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு எதிராகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசை விமர்சிப்பதை விட நீட் தேர்வால் பயனடையும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை சீண்டியுள்ளார். அதில் நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவதையும் தடுக்க முடியவில்லை என்பதும் 100% உண்மையாகும். இதை நிரூபிப்பதற்கும் ஏராளமான புள்ளி விபரங்களை எடுத்துக்காட்ட முடியும். 

நடப்பாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 65,000 மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 14,10,755 பேரில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், இவர்களில் முதல் 65,000 இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டுக் கணக்கின்படி பார்த்தாலும் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியமாக வேண்டும். 

ஆனால், முதல் 50,000 இடங்களுக்குள் வந்தவர்களுக்குக் கூட இடம் கிடைப்பதில்லை; அதேநேரத்தில் 7 லட்சத்திற்கு அதிகமான தரவரிசையில் வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது தான். நீட் தேர்வில் 60% மதிப்பெண் பெற்றவர்களில் பலர் அந்தக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் விலகிக் கொள்ள, கோடிகளை குவித்து வைத்திருக்கும் பலர் 15 விழுக்காட்டுக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தாலும், பணத்தைக் கட்ட முடியும் என்பதால் மிக எளிதாக சேர்ந்து விடுகின்றனர். 

மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவப் படிப்புக்கு கோடிகளைக் கொட்டும் மாணவர்களைப் பிடித்துத் தரும் வேலையைத் தான் நீட் தேர்வு செய்கிறது என எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக ஓனர் பச்சமுத்துவையும், எம்ஜிஆர் யூனிவர்சிட்டி நடத்தும் ஏ.சி.சண்முகம், விஐடி பல்கலைக்கழகம் விஸ்வநாதன் போன்ற முக்கிய கல்வி நிறுவங்களுக்கு ஒரே அறிக்கை மூலம் ஆப்படிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படி ஒரு காட்டமான அறிக்கைக்கு பின்னணி என்னன்னு விசாரித்தால், ராமதாஸ் கட்சியினர் நிற்கும் அத்தனை தொகுதிகளிலும், அவர்களைத் தோற்கடிப்பதற்கு அனைத்து வகையிலும் உதவுவதாக உறுதி அளித்து திமுகவில் சீட் வாங்கியது மட்டுமல்லாமல், கோடி கோடியாய் செலவழித்து ஜெயிச்ச தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவை பழிவாங்கும் நோக்கத்தில் வம்பில் சிக்கவைக்கும் முயற்சியாக, அவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தை கோர்த்துவிடவே இந்த அறிக்கை சொல்லப்படுகிறது. ஆனால், கூட்டணியில் உள்ள ஏசி சண்முகமும் மருத்துவக்கல்லூரி வைத்துள்ளதால் இந்த லிஸ்டில் அவரையும் கோர்த்து விட்டுள்ளதால் அன்புமணி மேல கடுப்பில் உள்ளாராம்.