அன்புமணியை ஓடவிட்ட தர்மபுரி மக்கள் ”மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற மந்திரத்தோடு களம் இறங்கிய பாம.கவிற்கு மரண அடியை கொடுத்திருக்கிறார்கள் தர்மபுரி மாவட்ட மக்கள். பா.ம.க வானது அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து எழு இடங்களில் போட்டியிட்டது. இதில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுவது அன்புமணி போட்டியிட்ட தர்மபுரிதான். அன்புமணி வெற்றிக்காக பல கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். வன்னியர் ஓட்டுகள் தர்மபுரி தொகுதியில் அதிகம் என்பதால் அன்புமணி இத்தொகுதியில் மீண்டும் களம் இறங்கினார்.  தி.மு.க சார்பிக் செந்தில்குமாரும் போட்டியிட்டனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்நிலையில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த அன்புமணி தற்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட செந்தில் குமாரை விட சுமார் 20000 வாக்குகள் பெற்று படுமோசமாக பின்னடைவில் உள்ளார்.

பூ.தா.இளங்கோவன், பூ.தா.அருள்மொழி, பண்ரூட்டி வேல்முருகன் ஆகியோர் ஆக்டிவாக இருந்த காலத்திலிருந்து பாமகவின் வாக்கு வங்கி சதவிகிதம் அப்படியே ஒரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மக்களின் எண்ண ஓட்டம் மற்றும் அரசியல் கள நிலவரம் பற்றி  அறிந்து கொள்ள சில விஐபிக்கள் எடுத்த சர்வேயில் பா.ம.க வாக்கு வங்கி உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

அதில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் திண்டிவனம், மைலம் ஆகிய பகுதிகளில் திமுகவிற்கு அடுத்த இடத்தில் அதாவது, 2வது இடத்தில இருப்பதை சர்வே முடிவில் தெரிந்தது. 

இதற்கு அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டினம் பகுதிகளிலும், இதேபோன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் முன்பு இருந்ததை விட வாக்கு வங்கிகள் உயர்ந்து காணப்படுகிறது.  இதே போன்று, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் பகுதிகளிலும் கணிசமான வளர்ச்சியில் இருந்தது.  

அதிகமான தொகுதிகள் அடங்கியுள்ள மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர், ஆற்காடு, அணைக்கட்டு வாணியம்பாடி கிராமப்பகுதிகள் மற்றும் ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் புதிய கிராமக்கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால், இங்கும் கணிசமான கூடுதலாக வாக்குகள் பெற பிளான் போட்டுள்ளது. 4 லிருந்து 5 சதவிகிதமாக இருந்த வாக்கு வங்கி வட மாவட்டங்களில் 10 சதவீதத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சில இடங்களில், குறைந்தது 15 சதவிகிதமும் அதிகபட்சம் 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது (இது வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகள் மட்டும்) ஆக மொத்தத்தில் வட மாவட்டங்களை பொறுத்தவரை சராசரியாக 10 சதவிகிதத்தை தாண்டியுள்ளது தெளிவாக தெரிந்தது. இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட ராமதாஸ் மற்றும் அன்புமணி அதிமுக பிஜேபி கூட்டணியில் 7 தொகுதிகளை வாங்கி களம் கண்டது. ஆனால், திமுகவின் மாஸ்டர் பிளானாலும், அதிமுக அமைச்சரின் உள்ளடி வேலைகளாலும் அன்புமணி தாறுமாறான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைந்துள்ளார். 

திமுக தரப்பில் களத்தில் நின்றவர் டாக்டர் செந்தில்குமார். வன்னியர்கள் நிறைந்த தொகுதி என்பதாலும், அன்புமணியை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரை நிற்கவைத்தது. இப்படி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களை களமிறக்கியுள்ளதால், அன்புமணியை வாக்கு அப்படியே சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக வாக்குவங்கி , விசிகவின் தனிப்பட்ட செல்வாக்கும் மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் என திமுக வேட்பாளர் தட்டித் தூக்கியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க,  காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் பாமக மீது செம கடுப்பில் உள்ளதும், அந்த கடுப்பு அப்படியே வேல்முருகனிடம் சேர்ந்துள்ளனர். தற்போது வேல்முருகன் திமுகவிற்கு ஆதரவாக உள்ளதால் பாமக ஓட்டுகள் பல்க்காக அப்படியே திமுகவுக்கே விழுந்துள்ளது தெரிகிறது.

இதைவிட முக்கியமான தகவல் என்னன்னா? ஆளும் அதிமுகவை பொறுத்தவரை எம்பி தேர்தலை விட அடுத்ததாக தொகுதியைவிட, இடைத்தேர்தல் நடக்க உள்ள அரூர், பாப்பிரெட்டிக்கு தான் அதிக கவனம் செலுத்தினார்களாம்  அமைச்சர்கள். இது போக அதிமுக - பிஜேபி கூட்டணி மீதான அதிருப்தியும், கடந்த காலங்களில் பிஜேபி அதிமுகவைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துத் தள்ளிவிட்டு அப்படியே அந்தர்பல்டி அடித்து அவர்களுடனேயே கூட்டணியில் சேர்ந்துகொண்டது என பல்வேறு விமர்சனங்கள் அன்புமணியை சாய்த்துவிட்டது அப்பட்டமாக தெரிகிறது.