எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ராமதாசும், இல்லை திமுகவுடன் தான் கூட்டணி என அன்புமணி ராமதாசும் கூறி வருவதால் பாமக ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள் நிலையில் அகில இந்திய கட்சிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் மாநில கட்சிகளும் தேர்தல் வீயூகங்களை அமைத்து வருகின்றன. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி போன்ற விஷயங்களில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி உருவாக்கப்படும் என பேசப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவா.. திமுகவா என பாமக ஆலோசனையில் உளளதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என ஓபனாகவே கூறி வருகிறார்.
ஆனால், அன்புமணி ராமதாசோ அதிமுகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என கூறி வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்றும், நமக்கு எதிர்கால அரசியலே இல்லாமல் போய்விடும் என நினைக்கிறார்.
அகில இந்திய அளவில் அடுத்து பிஜேபி வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. அதுல போய் நான் எம்.பியாகி என்ன வந்துடப் போகுது. திமுக கூட்டணிக்குப் போனால், அங்கே காங்கிரஸ் இருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது அமைச்சரவையில் நமக்கு இடம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்டாலினிடம் இதை ஏற்கெனவே துரைமுருகன் உள்ளிட்ட சிலர் சொன்னபோது, அவரிடம் இருந்து பெரிய ரியாக்ஷன் எதுவும் வரவில்லை. ஆனாலும் விடாமல் பாமக தரப்பில் இருந்து திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 27, 2019, 7:45 AM IST