சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி..! தமிழகத்தில் அதிமுகவோடு கூட்டணி இல்லை- அன்புமணி

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.

Anbumani has said that they will form a coalition government in the assembly elections

என்எல்சி போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி யில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 18 பேரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுவிக்க வேண்டும். என்எல்சி போராட்டத்தின் போது சில சமூக விரோதிகள் நுழைந்ததால் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது. என்.எல்.சி க்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது. என தெரிவித்தவர். தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதல்வர் 3 மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

Anbumani has said that they will form a coalition government in the assembly elections

என்எல்சிக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிப்பது ஏன்.?

ஆனால் தற்போது 3 போகம் விளையும் விலை நிலங்கள் என்.எல்சிக்காக அழிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். தற்போது உள்ள நிலையில் என்.எல்.சி 3 ஆம் சுரங்கம் அமையுமா? அல்லது அமையாதா? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். என்.எல்.சி பிரச்சினை தமிழக மக்களின் பிரச்சினை. விளை நிலங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். தற்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. ஆனால் விளை நிலங்களை அழித்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை என்.எல்.சி  வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது.  என்.எல்.சி நிறுவனத்துக்கு தமிழக அரசு ஏன் உதவியாக உள்ளது என தெரியவில்லை என கூறினார். மண்ணுக்கும், மக்களுக்கும் பிரச்சினை என்றால் பாமக போராடும் என தெரிவித்தார். 

Anbumani has said that they will form a coalition government in the assembly elections

பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக தொடருகிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை. மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில்  பாமக ஒரு மித்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும். அதற்கேற்ப யூகங்களை வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலின் போது எடுப்போம் என அன்புமணி தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios