தமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சூழ்நிலைக்கு தக்கபடி மாறுவது தானே ஒரு அரசியல்வாதியின் ராஜ தந்திரமாக கருதப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் பல வியத்தகு மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடித்தவர் நாட்டை ஆளக்கூடாது. படித்தவன் தான் நாட்டை ஆள வேண்டும் என நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆக்ரோஷமாக எதிர்த்து பேசிவந்த பாமாக தன்னுடைய போக்கீலும் திடீர் மாற்றங்களை தற்போது செய்திருக்கிறது. 


பாமாக தலைவர் ராமதாஸ் ஆகட்டும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகட்டும் இருவருமே நடிகர்கள் அரசியலுக்கு வருவதை குறித்து எப்போதும் எதிர்மறையான கருத்துக்களை உடையவர்கள் தான். அதற்கு ஏற்ப நடிகர்கள் நிஜத்தில் சண்டை போடும் அளவிற்கு வலுவானவர்கள் இல்லை. சினிமாவில் ஒரு நோஞ்சான் நடிகர் கூட எதிரிகளை பந்தாடுவார். என்னிடம் அவரை மோதச்சொன்னால் கதையே வேறு என்பது போலெல்லாம் கூட அன்புமணி சவடால் பேசி இருக்கிறார்.


ஆனால் தற்போது பாமக தன்னுடைய அரசியல் போக்கில் புதுப்பாதையை பிடித்திருக்கிறது. ஏற்கனவே 2016 சட்ட மன்ற தேர்தலின் போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற  வாசகத்தை முன்வைத்து போட்டியிட்டபோது படுதோல்வியை சந்தித்த காரணத்தால் இனி வரும் தேர்தலில் தங்களுக்கான இடத்தை வலுப்பெற செய்திட ஆவன் செய்து வருகிறது பாமக. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது நடிகர்களை விமர்சிப்பதை குறைத்துக்கொண்டிருக்கின்றனர் இந்த தந்தையும் மகனும்.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் பாமகவில் இணைந்திருக்கிறார். இணைந்த உடனேயே அவருக்கு பாமகவின் மாநில துணைத்தலைவர் பதவியை கொடுத்திருக்கிறார் ராமதாஸ். 

பாமகவின் அதிரடியான இந்த மாற்றம் குறித்து அன்புமணியிடம் பாமக முன்னேற்ற பதில் சென்று கொண்டிருக்கிறதா என  சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில்,  சினிமாவையும், நடிகர்களையும் பட்டாளி மக்கள் கட்சி வெறுக்கவில்லை என்றும், சினிமா கலாச்சாரத்தை மட்டுமே வெறுப்பதாகவும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக, தனது சமூகத்தை சேர்ந்த நடிகர்களை பாமகவில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் பாமகவின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே இயக்குனர் தங்கர் பச்சான், பாடகர் குப்புசாமி, இயக்குனர் வ.கவுதமன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பேச வைத்துள்ளனர்.  இப்படி  சினிமா நடிகர்களை எதிர்த்த பாமக, அரசியல் கொள்கையில் முற்றிலும் புதுமையான  போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரஞ்சித் பாமகவில் இணைந்தது போல  விரைவில் சந்தானமும் மேலும் சில நடிகர்களும் இனைய வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.