போக்குவரத்து துறையில் ஊழல் இருப்பதால் தான் அந்த துறை நஷ்டத்தில் இயங்குகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் ஊழல் இருப்பதால் தான் அந்த துறை நஷ்டத்தில் இயங்குகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளாக சுற்றுச் சூழல் தொடர்பாக தீவிரப் போராட்டம் நடத்தி வெற்றி அடைந்துள்ளோம். அனல் மின் நிலையங்களை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். தொடக்கத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடியவர்கள் நாங்கள் தான். காலநிலை மாற்றம் என்பது தற்போதைய பிரச்சினை. இப்போது நம் தலைமுறை நடவடிக்கை எடுத்தால் தான் பிற்கால சந்ததிகள் வாழ முடியும். நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மிகப்பெரும் இயற்கை சீற்றங்களை, ஆபத்துகளை எதிர்கொள்வார்கள். நூறாண்டுகளில் அதிக வெப்பம் உள்ள ஆண்டு இந்தாண்டு என்கிற சொல்லாடலை இனி வருந்தோறும் கேட்கப் போகிறோம். உலக நாடுகள் இணைந்து பாதிப்புகளை சரிசெய்ய ஆண்டுதோறும் 200 பில்லியன் (15 லட்சம் கோடி) டாலர்கள் செலவழிக்கின்றன.

காற்று மாற்றால் 70 லட்சம் மக்கள் ஆண்டுதோறும் இறக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் 17 லட்சம் மக்கள் காற்றுமாசால் இறக்கிறார்கள். சென்னையில் 11 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். மற்ற திட்டங்களுக்கு வரும் பணத்தையும் சாலை, மேம்பாலம், மல்டிலெவல் கார்பார்க்கிங் போன்ற திட்டங்களுக்கு செலவழித்து விடுகிறார்கள். 2007 ல் 30 லட்சம் தனியார் வாகனங்கள் இருந்தன 2019 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. 1998 ல் 2500 பேருந்துகள் இருந்தன. தற்போது 700 வாகனங்கள் மட்டுமே அதிகரித்துள்ளன. 8000 ஆயிரம் பொது போக்குவரத்து வாகனங்களை கொண்டுவர வேண்டும். சாலை விபத்துகள் குறையும். 200 கவுன்சிலர்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

அது அரசியல் அல்ல. அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். சென்னையில் பசுமைத் தீவுகள், காடுகள் உருவாக்க வேண்டும். அனல்மின் நிலையங்கள் தான் உலகளவில் மிகப்பெரும் காற்று மாசை ஏற்படுத்துகிறது. சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். சைக்கிளுக்கென ட்ராக்குகள் அமைக்க வேண்டும். கூவம் கரைகளில் அமைக்கலாம். மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்க வேண்டும். பேருந்துகளை நவீனப்படுத்தி எண்ணிக்கையை இலவசம் என அறிவித்தால் சென்னைக்கு ஒரு வரமாக இருக்கும். போக்குவரத்து துறையில் ஊழல் இருப்பதால் தான் நஷ்டத்தில் இயங்குகிறது என்று தெரிவித்தார்.
