Asianet News TamilAsianet News Tamil

Anbumani Ramadoss: #அன்புமணி_பார்லிமெண்டுக்கு_செல்லவும் டிவிட்டரை பொளக்கும் நெட்டிசன்ஸ்…

அன்புமணி பார்லிமெண்டுக்கு செல்லவும் என்ற ஹேஷ்டேக்கை இணைத்தில் குறிப்பிட்டு பலரும் கருத்துகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

Anbumani absent parliament session
Author
Chennai, First Published Dec 3, 2021, 7:58 PM IST

அன்புமணி பார்லிமெண்டுக்கு செல்லவும் என்ற ஹேஷ்டேக்கை இணைத்தில் குறிப்பிட்டு பலரும் கருத்துகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

Anbumani absent parliament session

கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரானது வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் தேசிய மற்றும் மாநில நலன் சார்ந்த விஷயங்களை தமிழக தரப்பு எம்பிக்கள் எழுப்ப திட்டமிட்டு கூட்டத்தொடரில் பங்கேற்று உள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடக்க நாளில் தமிழகத்தை சேர்ந்த 18 மாநிலங்களவை எம்பிக்களில் மொத்தம் 17 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் யார், யார் என்ற விவரங்கள் அனைத்தும் ராஜ்யசபா இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Anbumani absent parliament session

வரிசை எண் 137ல் என்று குறிப்பிட்டு 153 வரை தமிழக எம்பிக்களின் பெயர் பட்டியல் உள்ளது. இதில் முதல் பெயராக கனிமொழி என்விஎன் சோமு, சி. தம்பிதுரை, வைகோ, நவநீதிகிருஷ்ணன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியே இந்த பட்டியலில் 18 பேரில் அன்புமணி ராமதாசை தவிர 17 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ் மட்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. தொடக்க நாட்களில் இது பற்றிய விவரங்கள் அவ்வளவாக வெளியாகாத நிலை இருந்தது. ஆனால் இப்போது, இணையத்தில் குறிப்பாக டுவிட்டரில் அவரின் ஆப்சென்ட் விவரம் பெரும் விமர்சனத்துக்கும், கேலி, கிண்டல்களுக்கும் ஆளாகி உள்ளது.

இஷ்டம் போல பலரும் பேசு பொருளாக்கி, கடும் விவாதத்தை உருவாக்கி வருகின்றனர். #அன்புமணிபார்லிமெண்டுக்குசெல்லவும் என்ற ஹேஷ்டேக்கும் பிரபலமாகி சக்கை போடுபோடுகிறது.

Anbumani absent parliament session

அஞ்சுகோடி அன்புமணி, ஆப்சென்ட் அன்புமணி என விமர்சனங்கள் ஏகத்துக்கும் வலம் வருகின்றன. நாடாளுமன்றம் பக்கமே போகாமல் எதற்காக இந்த பதவி என்றும் கேள்வி கேட்டு பாமகவினரை நெட்டிசன்கள் திணறடித்து வருகின்றனர்.

3வது நாளாகவும் அன்புமணி நாடாளுமன்றம் செல்லாததை குறிப்பிட்டு, விளையாட்டுல ஹாட்ரிக் அடிச்சா உலகமே கொண்டாடுது… அன்பு மணி ராமதாஸ் மட்டும் அடிச்சா டேக் பண்ணி கிண்டல் செய்கிறீர்களா? என்று இணையத்தில் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஒரு சிலர் 15 சதவீதம் மட்டுமே வருகை பெற்று கடைசி இடத்தை அன்புமணி பிடித்துள்ளார். இன்னும் சிலர், 2019ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய விவரங்களை வெளியிட்டு அதில் அன்புமணியின் பங்களிப்பு என்ன என்பதை நீட்டி முழக்கி அதிரடி காட்டி உள்ளனர்.

Anbumani absent parliament session

பேச வேண்டிய இடத்தில் கலந்து கொண்டு பேசாமல் இருப்பதும், பேச கூடாத சாதி பெருமையை பேசி உணர்வை தூண்டும் வகையில் பேசுவதும் அன்புமணியின் வாடிக்கை என்று விமர்சனத்தை முன் வைத்து உள்ளனர். ஜெய்பீம் விவகாரத்தில் அதிக அக்கறை காட்டிய அவர், மக்கள் பிரச்னைகளை பற்றி நாடாளுமன்றத்தில் பேச முன்வராமல் ஆப்சென்ட் ஆவது ஏன் என்றும் கேள்விகளை நெட்டிசன்கள் தெறிக்கவிட்டுள்ளனர்.

சூர்யாவிடம் 9 கேள்விகள் கேட்கும் நீங்கள், வன்னிய சாதி மக்களின் இட ஒதுக்கீடு ஏன் ரத்து என்பது நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேட்க முடியாதா என்று போட்டு தாக்கி வருகின்றனர்.

Anbumani absent parliament session

நடப்பு கூட்டத்தொடரில் மட்டுமல்ல…. கடந்த கால நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் கடுமையான, மிக மோசமான வருகை பதிவேட்டை வைத்திருப்பவர் அன்புமணி ராமதாஸ். 2020ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மொத்தம் உள்ள 23 அமர்வுகளில் அவர் பங்கேற்றது வெறும் 2 அமர்வுகள் தான்.

2020ம் ஆண்டு செப்டம்பர் மழைக்கால கூட்டத்தொடரில் 10 அமர்வுகள் நடந்தன. அதில் ஒரு அமர்வில் கூட அன்புமணி கலந்து கொள்ளவில்லை. தொடரும் அன்புமணியின் இந்த ஆப்சென்ட் விவகாரம் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கட்சியினரிடமும் பெரும் விவாத பொருளாகி உள்ளது என்பது மட்டும் நிஜம்…!!

Follow Us:
Download App:
  • android
  • ios