தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞர் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அன்று மறைந்தார் அவரது எண்ணிலடங்கா தொண்டர்களுக்கு பேரிழப்பாக அவரது இழப்பு அமைந்தது. தொடர்ந்து அவரது உடல் மெரினாவில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

திராவிட இனத்திற்காகவும், தமிழினத்திற்காகவும் அவர் செய்த எண்ணிலடங்கா நற்செயல்கள் காரணமாக அவருக்காக தமிழகமே கண்ணீர் வடித்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் அவருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் வந்திருந்தனர்
 அப்படி நேரில் அவர முடியாதவர்கள் கூட தொலைக்காட்சியில் கலைஞரின் இறுதிச்சடங்கினை கண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

கலைஞரின் உடல் நலம் சீரியசான நாள் முதல் இன்று வரை அனைத்து ஊடகங்களின் கவனத்திலும் முதலில் இருப்பவர் கலைஞர் தான். அவர் உடல் நலம் சரியில்லாமல் கவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அவரை பற்றிய செய்திகள் தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றனர்.

இதே போல தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் போதும் அவர் குறித்த செய்திகள் அதிகம் வந்தது. பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகள் மக்களை எந்த அளவிற்கு சென்றடைந்திருக்கின்றன, என அறிய  இந்தியாவின் ஒளிபரப்புதுறை பார்வையாளர்கள்  ஆய்வு மையம், கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். 

அதில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில்  வந்திருக்கும் தகவல் கலைஞர் மற்றும் ஜெயலலிதா இந்த இருவரில் யார் குறித்த செய்திகள் மக்கள் மத்தியில் அதிக பார்வையாளர்களை பெற்றிருக்கிறது என்பது தான்.
 இதிலும் ஜெயித்திருப்பது அம்மா தான். ஜெயலலிதா கூறித்த செய்திகள் 7340 லட்சம் பதிவுகளை பெற்றிருக்கிறது. 

அதே சமயம் கலைஞரின் செய்திகள் ஒளிபரப்பாகிய சமயத்தில்  5850 லட்சம் பதிவுகள் அவர் இறந்த தினத்தை ஒட்டி பதிவாகி இருக்கிறது.இந்த இரு அரசியல் தலைவர்களின் உடல் நலம் குறித்து அறிய மக்கள் காட்டிய ஆர்வமும் , அவர்களின் இறுதி சடங்கினை தொலைக்காட்சியிலாவது காணவேண்டும் எனும் அவர்களின் முனைப்பும் தான் இத்தனை பார்வையாளர்களை செய்தி சேனல்களின் பக்கம் திருப்பி இருக்கிறது.

இதில் கருணாநிதி குறித்து ஆகஸ்ட் 4 முதல் 10 வரை ஒளிபரப்பான செய்திகள் 5350 லட்சம் பதிவுகளை சராசரியாக கொண்டிருக்கிறது. மக்களுக்காக பல சாதனைகளை நிகழ்த்திய இந்த இருவர் மீது மக்கள் இத்தனை அக்கறை கொண்டிருந்தனர் என்பது இதனால் என்றும் ஒரு வரலாற்று சம்பவமாக பதிவாகி இருக்கிறது.