anadhraj pressmeet about admk team joining
அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க முதலில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவிற்குள் ஏற்பட்ட பிணக்குகளையும் பிளவுகளையும் பொதுவெளியில் மிக தைரியமாக விமர்சித்தவர் நடிகர் ஆனந்தராஜ்.
சசிகலாவை விமர்சித்த ஆனந்தராஜ் எடப்பாடியை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா என்ன?
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆனந்தராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் நீட் தேர்வில் இருந்து நமக்கு விலக்கு வாங்கித் தந்திருப்பார்.

அரசு தொய்வில்லாமல் செயல்பட முதல்வர் எடப்பாடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக அதிமுக அமைச்சர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி எதை நிரூபிக்க முயற்சிக்கிறார். ஜெயலலிதாவை விட துரிதமாக செயல்படுவதாக எடப்பாடி காண்பிக்கிறாரா?"
"முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் கையெழுத்து போட வேண்டியது பூரண மதுவிலக்கிற்குத் தான். ஏதோ ஒன்றை மறைப்பதற்காக இணைப்பு நாடகத்தை நடத்துகின்றனர். இரு அணிகளையும் இணைக்க வேண்டுமென்றால் ஆட்சியை கலைக்க வேண்டும், கலைத்துவிட்டால் அனைவரும் சமமாகி விடுவார்கள்." இவ்வாறு நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
