பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களில் இருந்து இடம் கைப்பற்றப்பட உள்ளது. அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் கடுமையான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டது, அப்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என பாமக எம்எல்ஏ கோ.க மணி கூறினார். விவசாய நிலங்களை தவிர்த்து மற்ற நிலங்களை விமானநிலையத்திற்கு அரசு எடுக்கலாம் என்றும் தி. வேல்முருகன் கூறினார்.

இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! திசை திருப்பவே உண்ணாவிரதம்.!அப்பாவி போல நடித்தவர் தான் இபிஎஸ்.!கே. பாலகிருஷ்ணன்
விவசாய நிலங்களை தவிர்த்து அரசு புறம்போக்கு நிலங்களை விமான நிலையம் அமைக்க பயன்படுத்தலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினர். அதே நேரத்தில் விமான நிலையம் அமைந்தால் அது பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை பாதிக்கும் என்றும் நாகை மாலி கருத்து கூறினார்.
அப்போது இதற்கு பதில் அளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையம் விவசாயிகளுக்கோ அல்லது 13 கிராம மக்களுக்கோ பாதிப்பு இல்லாத வகையில் மேற்கொள்ளப்படும் என்றார். விமான நிலையம் அமைய இடம் தருவோருக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என்றும், வீடு இழப்போருக்கு வேறு இடத்தில் புதிய வீடு கட்டித் தரப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் கூறியுள்ளார் என்றார்.
இதையும் படியுங்கள்: Bharat Jodo Yatra: பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன், உத்தவ் தாக்கரே, சரத் பவார் பங்கேற்பு
தற்போது சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாளும் வகையில் உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 3.5 கோடி பயணிகள் வந்து செல்வர் எனவே பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றால். சென்னை விமான நிலையம் மூன்றாவது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது,
5 ஆம் இடத்தில் இருந்த பெங்களூரு விமான நிலையம் இப்போது மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது, ஐதராபாத் பெங்களூர் விமான நிலையங்கள் 14 முதல் 12 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் தேவையை கருத்தில் கொண்டு இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளது.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விளை நிலங்கள் இருப்பதால் சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 11 இடங்களை ஆய்வு செய்து பிறகுதான் பரந்துரில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலை கருத்தில் கொண்டு இடம் தேர்வு செய்யப்பட்டது, 13 கிராம மக்களிடம் கருத்து கேட்டதில் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அக்கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து விளைநிலங்கள் பாதிக்காதவாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
