பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக தலைவர் அமித்ஷா, தற்போது வேகமாக குணமடைந்து வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் பாஜக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் உள்ள பாஜக ஆட்சி இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்றடத தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முழு வீச்சில் வேலை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை முடுக்கிவிட்டுள்ளார்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்..
இந்நிலையில் இன்று பாஜக . தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமித்ஷா விரைந்து குணமடைந்து வருகிறார் என்றும் , அவா் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 17, 2019, 11:01 PM IST