அ.தி.மு.க, தி.மு.க.கட்சிகளை விட அதிக அறிக்கைகளும் வாய்ச்சவடால்களும் விட்ட டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. அணி இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னணியில் இல்லை. இதனால் பேரதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளார் டிடிவி.

காலை எட்டுமணிக்கு தமிழக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஒன்றிரண்டு தொகுதிகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் மூன்றாவது இடத்தைப்பிடித்திருக்கும் தினகரனின் அமமுக கட்சி பாராளுமன்றத்திலோ, சட்டசபை இடைத் தேர்தலிலோ ஒரு இடத்தில் கூட முன்னணி வகிக்கவில்லை.இத்தனைக்கும் இடைத்தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் டிடிவி கட்சியினரே.

தேர்தலுக்கு முன் 22க்கு 22 என்று ஓவராய்க் கூவிய கட்சி என்றால் அது அமமுகதான்.22லும் வென்று முதலில் ஆட்சியைக் கவிழ்ப்போம். அடுத்து தேர்தலை நடத்தி ஆட்சியைப் பிடிப்போம் என்று முழங்கி வந்த தினகரனின் எதிர்காலமே இத்தேர்தல் முடிவால் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.