அமமுக பொருளாளரை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி..! அடுத்தடுத்து பல்டி அடிக்கும் நிர்வாகிகளால் டிடிவி அதிர்ச்சி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகியான தஞ்சை மாவட்ட செயலாளர் மா.சேகர் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அமமுக பொருளாரும், திருச்சி மாவட்ட செயலாளர் அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக சசிகலா, டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து இரட்டை தலைமையோடு அதிமுக தலைமையினான அரசு செயல்பட்ட வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியை இழந்த பிறகு ஒற்றை தலைமை நோக்கி செயல்பட தொடங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த ஆரம்பித்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.
அதிமுகவில் இணையும் அமமுக நிர்வாகிகள்
இந்தநிலையில் தமிழகத்தில் அதிக வாக்கு சதவிகிதத்தை கொண்ட கட்சியான அதிமுக, தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகளால் பிரிந்து கிடக்கும் நிலை உள்ளது. எனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் அணிக்கு இணைக்கும் பணியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளை மீண்டும் தங்கள் அணிக்கு இழக்கும் நடவடிக்க்ஐயில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களில் மட்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிர்ச்சியில் டிடிவி தினகரன்
நேற்றைய தினம் தஞ்சாவூர் மாவட்ட செயலாளரும், டிடிவி தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த மா.சேகர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமமுக பொருளாளரும், திருச்சி மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன், அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதன் காரணமாக டிடிவி தினகரன் அணி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்