சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை பிரபு மற்றும் கலைச்செல்வன் பெற்றுக்கொண்டனர். 185 பக்கங்கள் கொண்ட நோட்டீஸில் அரசு கொறடா அளித்த ஆதாரங்கள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு 7 நாட்களில் விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினகரனின் அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மீது கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார் கொறடா ராஜேந்திரன். இதனை ஏற்று மூவருக்கும் விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது திமுக.

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் பதிவுத் தபாலில் இன்று சென்று சேர்ந்துள்ளது. 185 பக்கங்கள் கொண்ட அந்த நோட்டீஸில் தினகரனுடன் மூவரும் இருக்கும் புகைப்படங்களும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும், இதற்கு முன்பு பல்வேறு மாநில சட்டமன்றங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களும், அவர்கள் ஏன் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதற்கான காரணங்களும், தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நோட்டீஸ் கிடைத்த அடுத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அனால் தினகரன் கட்சியினரே, தினகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது கட்சி விரோத நடவடிக்கை என்றால் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் சசிகலாவுடனும், தினகரனோடும் படம் எடுத்துக்கொண்டவர்கள் தானே? என்று  185 பக்கம் மாங்கு மாங்குன்னு பல மேட்டரை குறிப்பிட்டு நோட்டீஸ் விட்ட சபாவை மண்டை காய விட்டுள்ளனர்.