அமமுக பதிவோ, அங்கீகாரமோ செய்யப்படாத கட்சி என்பது உச்சநீதிமன்றத்தின் மூலம் தெரிய வந்துள்ளதால் டி.டி.வி.தினகரன் மீது தொண்டர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 

நேற்று வந்த நடிகர்கள்கூட தங்களது கட்சியை பதிவு செய்துள்ளபோது இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் இன்னும் அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்கிற எண்ணத்தில் அமமுகவை பதிவு செய்யாதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் மட்டுமே பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொருந்தும். இந்நிலையில் தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று நடத்திய வழக்கில் நடந்த விசாரணையின்போது அமமுக பதிவோ, அங்கீகாரமோ செய்யப்படாத கட்சி என்பது வெட்டவெளிச்சமாக தெரிய வந்தது. அத்தோடு அமமுகவை அரசியல் கட்சியாக கருத முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்து விட்டார். இதனை அறிந்து கொண்ட அமமுக தொண்டர்கள், ‘இத்தனை நாட்களாக லெட்டர் பேடு கட்சியில் தான் இருந்தோமா..? இதையெல்லாம் முன்பே சரிசெய்து இருக்கக்கூடாதா..? இத்தனை நாட்களாக தேர்தலை முன்னிருத்தி நடத்தி வந்த வேலைகள் எல்லாம் வீணாக்கப் பார்த்தாரா டி.டி.வி. 

அங்கீகாரம் பெறப்படாத கட்சியை வைத்துக் கொண்டு துணைப் பொதுச்செயலாளர் என்கிற பதவி மூலம் எத்தனை பேரை இவர் கட்சியை விட்டு வெளியேற்றி இருப்பார்..? அதற்கான அதிகாரம் பதிவு செய்யப்படாத கட்சியில் இருந்து டி.டி.வி யார் கொடுத்தது. அவர் அதிமுகவை அடைய தொண்டர்களாகிய எங்களை பயன்படுத்திக் கொள்ளப்பார்த்து இருக்கிறார். உண்மையில் கட்சியை நடத்தி தொண்டர்களை வழிநடத்த முயற்சித்து இருந்தால் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் இப்படி தொண்டர்களின் எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்கி விட்டாரே.