வரும் மே 19 ஆம் தேதி திருப்பரங்குன்றனம். அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளில் போடியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெற்ற நேற்று சென்னையில் நேர்காணல் நடைபெற்றது. அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் செய்திர் தொடர்பாளரும் , முன்னாள் செய்தி வாசிப்பளருமான நிர்மலா பெரியசாமி சீட் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அமமுக சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அதன்படி சூலூர் தொகுதியில் சுகுமார்,  அரவக்குறிச்சியில் சாகுல் அமீது , திருப்பரங்குன்றத்தில் மகேந்திரன் மற்றும் ஓட்டப்பிடாரத்தில்  சுந்தர்ராஜ் ஆகியர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தினகரனைப் பொறுத்தவரை அரவக்குறிச்சித் தொகுதியை தனது மானப்பிரச்சனையாக பார்க்கிறார். ஏனென்றால் தனது அருகிலேயே வைத்திருந்த செந்தில் பாலாஜி தற்போது கட்சி மாறி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனால் அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து களம் இறங்கியுள்ளார்.

அரவக்குறிச்சியைப் பொறுத்தவரை கவுண்டர்கள் வாக்குளைத் தவிர அதிக எண்ணிக்கையில் இருப்பது, பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த இஸ்லமியர்கள் வாக்குகள். இதையடுத்து அவர்களது வாக்குளை வளைக்க திட்டமிட்ட தினகரன், செந்தில் பாலாஜிக்கு எதிரி போன்று செயல்படும் சாகுல் ஹமிதை நிறுத்தியுள்ளார்.