Amma whole body checkup plan started by cm edappadi palanisamy
அனைத்து வகை நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்து கொள்ளும் முழு உடல் பரிசோதனைதிட்டத்தை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் தான் அம்மா கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என்ற மூன்று வகை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
கடந்த 2016 ஆண்டு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு இத்திட்டம் செய்ல்படுத்தப்படுமா எனற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும், புதிய உடல் பரிசோதனை மையமாக இது உருவாகி உள்ளது. மேலும் இந்த மையத்தில் ரத்த பரிசோதனை முதல் மார்பக வரைவு, எலும்பு தின்மை அளவீடு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் செய்துகொள்ள முடியும். இதில் 3 விதமான திட்டங்கள் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளன.

1. அம்மா கோல்ட் திட்டத்தின் கீழ் 1000 செலுத்தி 60 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
2. அம்மா டைமண்ட் திட்டத்தின் கீழ் 2000 செலுத்தி 65 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
3. அம்மா பிளாட்டினம் திட்டத்தின் கீழ் 3000 செலுத்தி 70 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் தரை தளத்தில் அமைந்துள்ள இந்த பரிசோதனை மையம் முழுவதுமாகக் குளிரூட்டப்பட்டுள்ளது. எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனைகளுக்காக 7338835555 மற்றும் 044-2566611 என்ற எண்களில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்று கருதப்படுகிறது. இந்த தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
