புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வி.முருகன், அவைத்தலைவர் சுத்துக்கேணி பாஸ்கரை மிரட்டும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அண்மையில் புதுச்சேரிக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் வருகை தந்தார். அவர் வருகை தரவிருப்பதை கட்சியினரிடம் கூறுவதில் யார் என்பது குறித்து புதுவை மாநில செயலாளர் வி.முருகன் மற்றும் அவைத்தலைவர் சுத்துக்கேணி பாஸ்கர் ஆகியோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் செல்போனில் பேசிக் கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 அந்த ஆடியோவில், என் வேலையை நீங்கள் ஏன் செய்ய வேண்டும் என்று வி.முருகன் கேட்பதும், கட்சி விஷயத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் என்றும் இது குறித்து அடிமட்ட தொண்டன் கூட சொல்லலாம் என்கிறார் பாஸ்கரும். அவர்களுக்கிடையேயான செல்போன் உரையாடலில் ஒருவரையொருவர் மிரட்டும் வகையிலும், ஒருமையில் பேசிக்கொள்வதுமாக அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அமமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்...!