"வெட்கக்கேடு.. வெட்கக்கேடு" .! இருந்தாலும் வெளுத்து வாங்கிய அமித்ஷா..!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் தொடர் அமளி ஏற்பட்டது.

அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக "வெட்கக்கேடு... வெட்கக்கேடு" என கோஷம் எழுப்பினர் எதிர்க்கட்சியினர். 

இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன் உரையை எடுத்துரைத்தார் அமித்ஷா. காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியதாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 -ஐ நீக்கியது.

பின்னர் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவை உடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டார் அமித்ஷா. அப்போது இதுகுறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்த போது அவையில் எழுந்த பலத்த குரலான "வெட்கக்கேடு... வெட்கக்கேடு" முழக்கங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்ததாக அமைந்தது. இருந்தபோதிலும் இதை எதையும் பொருட்படுத்தாமல் அமித்ஷா தொடர்ந்து தனது  அறிவிப்பை வெளியிட்டு அசத்தினார்.