அந்த மொழிப் போர் தமிழ்நாட்டை உலுக்கியது, நாட்டையே மிரள வைத்தது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழறிஞர்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடி தாய்மொழி தமிழுக்கு வரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்திட நடத்திய தொடர் போராட்டங்களின் உச்சம் அது. 

மக்களின் மொழி உணர்வோடு விளையாடி வீண் வம்பை தேடிக் கொள்ள வேண்டாமென மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை உருவாக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என அமைச்சர் கூறியுள்ள நிலையில் முரசொலி இவ்வாறு எச்சரித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அதிரடியான பல சட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை தேசிய மொழியாகவும், நாட்டின் அதிகாரப்பூர்வ இணைய மொழியாகவும் அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை அனைவரும் ஏற்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தென்னிந்திய மாநிலங்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்தித் திணிப்பின் வெளிப்பாடாகவே இதை பார்ப்பதாகவும், அமித் ஷா தனது பேச்சைத் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தென்னிந்திய மாநிலங்கள் எச்சரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

குறிப்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என்று எச்சரித்துள்ளார். பாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அமித் ஷாவின் இந்த பேச்சை கண்டித்து வருகின்றன. இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கண்டித்து கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், மக்களின் தாய்மொழி உணர்வோடு விளையாடி வீண்வம்பைத் தேடிக் கொள்ளாதீர்கள் என எச்சரித்துள்ளது. முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு:- 1865 ல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை, அந்தக் காலகட்டத்தில் அவர் முதல் பிறந்த நாளைக் கூட கொண்டாடாத குழந்தை. 1864 அக்டோபர் 22 ஆம் தேதி பிறந்த அவர், அப்போது மூன்று மாத குழந்தையாக இருந்திருப்பார். அந்தப் பழைய வரலாற்றை குறைந்தபட்சம் படித்திருக்கவாவது முயற்சி செய்திருக்கவேண்டும்.

அந்த மொழிப் போர் தமிழ்நாட்டை உலுக்கியது, நாட்டையே மிரள வைத்தது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழறிஞர்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடி தாய்மொழி தமிழுக்கு வரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்திட நடத்திய தொடர் போராட்டங்களின் உச்சம் அது. அமித்ஷா மோடி போன்று குஜராத் கலவரத்தை போன்று தூண்டிவிடப்பட்ட கலவரம் அல்ல அது, தாய்மொழி உணர்வால் உந்தப்பட்டு உருவான எழுச்சிப் போராட்டம் அது. இந்தியாவில் அத்தனை மாநிலங்களுக்கு மத்தியில் அது தமிழகத்தில் தான் வெடித்தது. பின்னர் இந்த போராட்டம் இந்தி பேசாத பல மாநிலங்களுக்கும் பரவியது. இந்தி பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் என்று நேருவால் உறுதிமொழி அறிவிக்கப்பட்டு அது திரும்பத் திரும்ப அப்போது அறிவிக்கப்பட்டது. மோடி அவர்கள் உபயோகித்த சொல்லில் கூறவேண்டுமானால் இதெல்லாம் நடந்தபோது " அமித்ஷா பப்பு கூட அல்ல பேபி " அமித்ஷாவின் இன்று இந்தித்திணிப்பு பேச்சு தமிழகம் மட்டுமல்ல கர்நாடகா போன்ற மாநிலங்களில் உடனடியாக எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

இந்தி மாநிலம் போதும் இந்திய மாநிலங்கள் தேவையில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறாரா என தமிழக முதல்வர் காட்டமாக கேட்டுள்ளார். கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலாச்சாரத்தின் மீதான பயங்கரவாதம் இது என எச்சரித்துள்ளார். இப்போது அவரின் பேச்சுக்கு எதிராக தமிழகம் மட்டுமல்ல இந்தியை தாய்மொழியாக கொண்டிராத மாநிலங்களும் ஒன்றுகூடி அணிவகுக்க தொடங்கியுள்ளன. மக்களின் தாய்மொழி உணர்வோடு விளையாடி வீண் வம்பை தேடிக் கொள்ளாதீர்கள் என அமித்ஷாவுக்கும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போருக்கும் கூறிக் கொள்ள விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.