தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள எல்லா கட்சிகளும் தயாராகிவருகின்றன. தேர்தலை எதிர்கொள்ள வசதியாக கட்சியைப் பலப்படுத்திவருகிறது பாஜக. பிரபலமானவர்களை கட்சியில் சேர்க்கும் பணியை அக்கட்சி முடுக்கிவிட்டுள்ளது. மேலும் திமுக, அதிமுகவிலிருந்து ஆட்களை இழுக்கும் பணிகளையும் பாஜக செய்துவருகிறது. இந்நிலையில் அக்கட்சியி முன்னாள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழக தேர்தல் தொடர்பாக தனியார் டிவியில் பேட்டி அளித்துள்ளார்.


ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு அமித் ஷா அளித்துள்ள பேட்டியில், “நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இன்னும் நுழையவில்லை. மேலும் கூட்டணி குறித்து முடிவெடிக்க இன்னும் நாட்கள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த சில மாற்றங்கள் செய்துக்கொண்டிருக்கிறோம். அதிமுக எங்களுக்கு நெருக்கமான கட்சி. அதிமுகவோடு இரண்டு தேர்தலை சந்தித்துள்ளோம்.” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.