அமித் ஷா தமிழகத்துக்கு வந்து, தமிழகமே ஊழலில் முதலிடத்தில் இருப்பதாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் அதிமுகவுக்கு ஆப்படிக்கும் விதமாக வருமான வரித் துறையைக் களமிறக்கியது  பிஜேபி.  

அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அமைச்சர் ஒருவர் ஒருவர் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினாராம் . அந்த மீட்டிங்கில்  வரப் போகும் தேர்தலில் நாம் கூட்டணி சேராமல் இருப்பதுதான் நம் இருவருக்குமே நல்லது. தனித்துப் போட்டியிட்டால் 40 இடங்களிலும் நாங்க ஜெயிக்க முடியாது என்பது தெரியும்.

ஆனால், கணிசமான இடங்களில் நாங்கள் ஜெயித்துவிடுவோம். தமிழகத்தில் எப்படியும் தனித்து நின்றாலும் 25 இடங்களில் எங்களால் ஜெயிக்க முடியும். அப்படி ஜெயித்த பிறகு நாங்கள் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம். இப்போதே நாம கூட்டணி வைத்துதான் ஆக வேண்டும் என நினைத்தால், நீங்களும் ஜெயிக்க முடியாது. நாங்களும் ஜெயிக்க முடியாது’ என்று சொல்லி அமித்ஷாவை சூடாக்கினாராம்.

கோபத்தின் உச்சிக்கே போன அமித்ஷா, ‘இனி நீங்களே கேட்டாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பிஜேபிக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் எலெக்‌ஷனை எப்படி சமாளிக்கணும்னு எங்களுக்கு தெரியும்... நாங்க எப்படி ஜெயிக்கணும் என்பது எங்களுக்கு தெரியும்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். அமித்ஷாவை சூடாக்கிய பின்பு  மீட்டிங்கிற்கு  சென்னைக்கு வந்த அமித்ஷா. தமிழகத்தில் ஆட்சி அமைத்தே தீருவோம்... என்றெல்லாம் அனல் கக்கினார்.

தமிழகத்தில் ஊழல் நடக்கிறது? அமித் ஷா பேசியதை  சூட்டோடு சூடாக அடிக்கவேண்டும்  என்பதற்காகத்தான் இந்த மெகா ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இந்த ரெய்டு வெறும் டிரெய்லர் தான். இனி தான் இருக்கிறது மெயின் பிக்ச்சரே என்று ஒருதரப்பில் சொல்கிறார்கள்.

கோடிக் கோடியாக வாரிக்குவித்த முன்னால் ஆட்டு வியாபாரி காண்ட்ராக்டர்  செய்யாதுரையோடு எடப்பாடியின் மகன், சம்பந்தி ஆகியோருக்கு இருக்கும் தொடர்புகளை  வைத்து டெல்லி போன வேகத்தில் ஆறப்போடாமல் ஐடியை அனுப்பி எடப்பாடிக்கு ஆப்படித்துள்ளார் அமித்ஷா .