பன்றிக்காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ. தலைவர் அமித்ஷா இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் காரணமாக, டெல்லியில் உள்ள 'எய்ம்ஸ்' மருத்துவ மனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமித்ஷாவின் சிகிச்சை குறித்து பா.ஜ., மாநிலங்களவை உறுப்பினர் அனில்பலூனி விளக்கமளித்துள்ளார். அதில், ’அமித்ஷா விரைவில் குணமடைந்து வருகிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். அவர் நலம் பெற ஒவ்வொருவரும் செய்த பிரார்த்தனையால் விரைவில் உடல் நலம் தேறி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

 


ட்விட்டரில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், 'பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளேன். கடவுள் மற்றும் மக்களின் அன்பு வேண்டுதலுடன் விரைவில் குணமடைவேன்' எனத் தெரிவித்துள்ளார்.