மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீட்டில், மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான அமித்ஷா, தற்போது குடியேறியுள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய டெல்லி, கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சுமார் 14 ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்ததால், வாஜ்பாயின் வீடு அந்த பகுதியின் முக்கிய அடையாளமாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அவர் மறைந்ததை அடுத்து, அந்த வீடு காலியாக இருந்தது. இந்த வீட்டில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தற்போது குடியேறி உள்ளார். 

வாஜ்பாயின் நினைவு காரணமாக, அவர் வசித்த வீட்டில் அமித்ஷா குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக 2வது முறையாக ஆட்சி ஏற்ற பிறகு உள்துறை அமைச்சராக பதவியேற்றது முதல் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அமித் ஷா. இந்நிலையில் தைரியசாலியாகவும் எதற்கும் அஞ்சாதவராகவும், கார்கில் போரில் வெற்றியை தேடித் தந்தவர் என்கிற பெருமைக்கு உரியவராகவும் கருதப்படும் வாஜ்பாய் வாந்த வீட்டில் குடியேறுகிறார் அமித் ஷா.

 

இந்த வீட்டில் குடியேறுவதால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமித் ஷா எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.