அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  வருகை ஏற்பட்டிற்காக ரூபாய் 8 கோடி தான் செலவானது என குஜராத் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார் . அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகை எந்த அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டதோ அதே அளவிற்கு சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் அவரின் வருகைக்காக செலவு எவ்வளவு என்பதை மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் .  ட்ரம்ப் வருகைக்காக சுமார் 100 கோடி செலவிடப்பட்டதாக  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது . 

இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி,   ட்ரம்பின் வருகைக்காக எட்டு கோடி மட்டுமே செலவானது எனக் கூறியுள்ளார் .  அதிபர் ட்ரம்ப்  கடந்த 24 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தார் ,  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடந்த நமஸ்தே  ட்ரம்ப் நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார் .   முன்னதாக சபர்மதி ஆசிரமம் சென்ற அவர் பின்னர் தாஜ்மஹாலை  நேரில் பார்வையிட்டார் .  இந்நிலையில்  அவரது வருகைக்காக நூறு கோடி  செலவானதாக குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

அதற்கு பதிலளித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் விஜய்  ரூபானி  ,  ட்ரம்ப்  வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூபாய் 100 கோடி செலவானதாகவும், வெறும் இரண்டு தினங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை அரசு விரையம் செய்துள்ளது எனவும் குற்றஞ்சாட்டியது . இந்நிலையில் இதற்கு பதில் அளித்த மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி,   காங்கிரஸ் கட்சி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது ,  மொத்தம் எட்டு கோடி மட்டுந்தான் செலவானது .  அதில் குஜராத் மாநில அரசு நான்கு கோடி செலவிட்டது ,  அதே அளவு தொகையை அகமதாபாத் மாநகராட்சி செலவிட்டது .  சாலை பழுது பார்க்கும் பணிக்கு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என  அவர் விளக்கமளித்துள்ளார்.