பாகிஸ்தானுடன் இணைந்து அந்நாட்டு  பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார் அத்துடன் பாதுகாப்பு துறையில் சுமார் 20,000 கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் , அகமதாபாத்தில்  சர்தார் வல்லபாய் பட்டேல் விளையாட்டு அரங்கில் சுமார் ஒரு 1. 25 லட்சம்  மக்கள் முன்னிலையில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு கூறினார் அவரின் பேச்சுக்கு மைதானத்தில் கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார் .  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு இந்திய பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார் ,  அப்போது குஜராத் மாநில கலைய கலாச்சாரப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . 

பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தற்கு  சென்ற அவர்,   மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் அவர் போதித்த நெறிகளையும் பார்வையிட்டு வியந்தார்,  பின்னர் அங்கிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விளையாட்டு அரங்கத்திற்கு வந்த அவர்,  அங்கு திரண்டிருந்த  சுமார் 1.25 லட்சம் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார் ,  முன்னதாக உரையாற்றிய மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  இந்தியாவின் உற்ற நண்பர் என்றார் ,  உலகின் மதிப்புமிக்க தலைவரான ட்ரம்பை  இந்தியா வரவேற்கிறது , ட்ரம்பிற்கு  நமஸ்தே நமஸ்தே என பிரதமர் மோடி வரவேற்றார் , பின்னர்  உரையாற்ற வந்த அதிபர் ட்ரம்ப்,  பதிலுக்கு  நமஸ்தே என  கூறி இந்தியர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர்,   அமெரிக்கா எப்போதும் இந்தியாவை விரும்புகிறது என்றார் .  இந்தியா மனித குலத்துக்கு நம்பிக்கை அளிக்கும் நாடு என்றார். அதேபோல் கடின உழைப்புக்கு நல்ல உதாரணம் இந்திய பிரதமர் மோடி என அவர் புகழாரம் சூட்டினார். 

பொருளாதாரத்தில் உலகிற்கே வழிகாட்டும் நாடாக இந்தியா உள்ளது.   இந்தியா உலகிற்கு அமைதியை போதிக்கும் நாடு இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட  நாடு என இந்தியாவை பாரட்டி புகழ்ந்தார்,  மிகப்பெரிய ராணுவ பலம் கொண்டது இந்தியா அமைதியையும் சகிப்புத் தன்மையையும் கொண்டுள்ளது என்றார் தெற்காசிய நாட்டில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா உதவும் என்று  கூறிய ட்ரம்ப் ,  தெற்காசியாவில் தீவிரவாதத்திற்கு மையப்புள்ளியாக உள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாகிஸ்தானின் உதவியுடன் அழிக்க அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் .  சர்வதேச அளவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாலிபன் தீவிரவாதிகள் என இன்னும் பல பயங்கரவாத இயக்கங்களை அமெரிக்கா ஒடுக்கியுள்ளது  என்றனர் அவரின் பேச்சுக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.